பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

197

இ. கே. ஆர். சுப்பிரமணியன்

தஞ்சாவூர் மராத்திய அரசர்கள் என்ற நூலை 1928இல் கே. ஆர். சுப்பிரமணியன் என்பார் எழுதி வெளியிட்டுள்ளார். அவர் இந்தக் கல்வெட்டின் பிற் பகுதியை, ஒரு மராத்திய அறிஞரால் மொழிப் பெயர்த்துப் பெற்றதாகத் தம் நூலில் கூறியுள்ளார்.[1] இந்நூலில் இந்தக் கல்வெட்டைப் பல இடங்களில் தஞ்சாவூர் அல்லது மராத்தியக் கல்வெட்டு என்று குறிப்பிட்டிருக்கிறார். இவர் பெற்ற மொழி பெயர்ப்பு இந்நாளில் கிடைக்காதென்பது உறுதி:

ஈ. சி. கே. சீனிவாசன்

கருநாடகத்தில் மராத்தியர் ஆட்சி என்ற அரிய நூல் திரு.சி.கே. சீனிவாசன் என்பவரால் எழுதப்பெற்று. அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக 1944இல் வெளிவந்துள்ளது. இந்நூல் தஞ்சை மராட்டிய அரசர் வரலாற்றை விளக்கமாகத் தக்க ஆதாரங்களுடன் தருவதோடு அாஜி, சிவாஜி இவர்களின் தென்னாட்டுப் படையெடுப்பைப் பற்றி விரிவாக விளக்குகிறது. எனினும் இந்நூலில் முன்னுரையில் தஞ்சை மராத்தியக் கல்வெட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதேயன்றி, நூலில் ஒரிரு இடங்கள் தவிர்த்து[2] இக்கல்வெட்டுச் செய்திகள் மேற்கோளாகக் கொடுக்கப்பெறவில்லை. முன்னுரையில் [3]கூறியது பின்வருமாறு:

“A complete account of the Maratha Kings of Tanjore is given in the lengthy inscription in Maratha carved in the year 1803 A.D. on the walls of the Brihadeeswara Temple at Tanjore at the instance of Raja Serfoji. It contains a more or less a good account of the dynasty and was written after a study of all available documents. “Such a large historical inscription" says Mr. Sardesai, “is nowhere else to be found in the whole world” - (Sardesai, Main currents of Maratha History P.64).

உ. சிவச்சத்திரபதி என்ற பெயரில் கிருஷ்ணாசி ஆனந்த் சபாசத் எழுதிய சிவாஜி வரலாற்றையும், சிட்னிஸ் சிவதிக் விஜயப்பகுதிகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட எஸ். என். சென் என்பார், பக்கம் 251இல் "குறிப்புக்களும் பிற்சேர்க்கைகளும்' என்றபகுதியில், 'The Tanjore temple inscription is interesting only as a wonderful specimen of human industry and has very little intrinsic merit” area gy gasolujairartif. gotblošuljó fflum an மதிப்பீடு என்று சொல்வதற்கில்லை.


  1. 54. சுப்ரமணியன் பக்கம் 16 அடிக்குறிப்பு 1; “The author had the second and, relevant half of it translated for him by a Marathi gentleman of Tanjore during his stay there” (Preface to bis book)
  2. 55. சீனிவாசன், பக்கம் 171,243.
  3. 56. சீனிவாசன், பக்கம் 17