பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

II மெக்கன்சி சுவடிகள்


தஞ்சை மராட்டிய மன்னர்களைப் பற்றி மெக்கன்சி தொகுப்பில் பின் வரும் சுவடிகள் காணப்படுகின்றன:

1. டி 3119 மராட்டியர் வரலாறு (ஆர். 7453)

2. டி. 3180 தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு (எம் 79)

3. டி 3762 தஞ்சை சரபோஜி மன்னர் வமிசாவளி (எம் 75)

4. டி. зf90 தஞ்சை மராட்டிய மன்னர் வமிசாவளி

5. டி. 3779 தஞ்சை மராட்டிய மன்னர் வமிசாவளி (எம் 76)

6. டி 3926 தஞ்சாவூர் மகாராஷ்டிர மன்னர் வமிசாவளி (ஆர் 4049)


(1) டி 3119 எண் உள்ள சுவடி (ஆர் 7453)

மேல் 1 இல் குறித்துள்ள மராட்டியர் வரலாறு குறைப்பிரதியாகும். இது காப்பீடு செய்வதற்காக 1954ல் படியெடுக்கப்பட்டுள்ளது. ஆர் 7453 என்ற எண் கொண்ட இச்சுவடி 157 பக்கங்கள் கொண்டது; ஒவ்வொரு பக்கத்திலேயும் 24 வரிகளுண்டு. பிற சுவடிகளை நோக்க இதில் அதிகப் பிழைகள் இல்லை. இதன் மூலச் சுவடி 190 பக்கங்களையுடையது; ஒவ்வொரு பக்கத்திலும் 21-22 வரிகள்:1 9¾: X 7½: அங்குலம். இதில் முதலிலிருந்து, 1980ல் அச்சிட்ட போ.வ.ச.வில் பக்கம் 100இல் “பிற்பாடு சந்தாசாஹேப் மொஹிதீன்கான் என்பவர்களிடமிருந்து உபத்திரவம் ஏற்பட்டால் பிறகு பார்த்துக் கொள்வோம் என்ற”2 என்பது வரையில் உள்ளது. மேற்குறித்த போ.வ.ச.வில் பக்கம் 93இல் “பிறகு அன்னப்பா சேட்கே” என்பது முதல், பக்கம் 94இல், “அன்னப்பா மரணமடைந்ததற்காகப் பச்சாதாபப்பட்டார்” என்பது வரை அன்னப்பா சேட்கேயைப் பற்றிய செய்திகள் ஆர் 7453 ஆகிய குறைச்சுவடியில் இல்லை; டி 3180 டி 3762 ஆகிய முழுச்சுவடிகளில் உள்ளன.3 இம்முழுச்சுவடிகளைப் படித்தறிந்துகொள்ள ஆர் 7453 ஆகிய இச்சுவடி பெரிதும் உதவியாக உள்ளது என்பது ஒருமுறை ஒப்புநோக்கின் தெரியவரும். டி 3119ஐத் திருத்தியெழுதியதே ஆர் 7453 என்பதாகும்.

(2) டி. 3180 எண் உள்ள சுவடி

இது தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு என்ற தலைப்புடையது. இது எம் 79 என்று குறிக்கப் பெறுவதால், இது மெக்கன்சி சேகரித்தவற்றுள் 79ஆவது எண் உள்ள சுவடி என அறியப்பெறும். இது 12¼ X 7¾ அங்குலம் அளவில்


1. Descriptive Catalogue of Tamil Ms. G.O.M.L., Madras, vol. VIII 2 இந்நூல் பக்கம். 114 காண்க. 3. டி. 3180 இந்நூல் பக்கம் 106 காண்க.