பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

தஞ்சை மராட்டிய

215

சுவடிகளில் கண்ட செய்திகள் சுருக்கமாகத் திருமுடி சேதுராமன் சுவடியில் பக்கம் 46 முதல் 50 வரையில் சொல்லப்பட்டுள்ளன. (போ. வ. ச. வில் பக்கம் 17 இல் கண்ட தவறுகளைத் திருத்துவதற்கு இச்சுவடியும் பயன்படுவதாக உள்ளது).

8. சம்பாஜி ராஜாவின் மனைவி சுந்தரபாயி என்று திருமுடி கூற (பக். 67) போ. வ. ச. ஜெயந்திபாய் என்று கூறும் (பக்கம் 16). -

9. சிவாஜிக்குச் சயிபாயி சொயிராபாயி ஆகிய இருவரையும், ஏகோஜிக் குத் தீபாபாயி ஆண்ணுபாயி ஆகிய இருவரையும் ஒரே காலத்தில் திருமணம் செய்வித்தமை (திருமுடி. ப்க். 67)

10. விச்சகத்தி பரமாவும் ஷாஜியும் ஆகிய இருவர் மட்டுமே தனி நின்று போரிட்டமை (சேனைகள் கலந்து கொள்ளாமை) (பக்கம் 88-90.)

11. விச்சகத்தி பரமாவின் விருதுகள் மூன்று என்று போ. வ. ச. (பக்கம்29), கூறத் திருமுடியில் (பக். 91-92) ஆறு விருதுகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன.

12. சிவாஜியைச் சிவ லங்காதிபன் என்றமை (பக். 116)

13. அப்சல்கான் புறப்பட்டபொழுது சிவாஜி பூனாவிற்கு வந்தார் என்று போ. வ. ச. (பக். 26) கூறத் திருமுடியில் (பக். 117) பூனாவில் சிவாஜியின் மனைவி சயிபாயி ஆண்மகனைப் பெற்ற செய்தி ஷாஜி சொல்லியனுப்பியதன் பேரில் சிவாஜி பூனாவுக்கு வந்தார் என்றும், சம்பாஜி சகம் 1576 (கி.பி. 1657) இல் இறந்தார் என்றும் கூறப்பட்டன (திருமுடி பக்கம் 117).

14. கிருஷ்ணாஜி பண்டிதரை மடக்கியவன் 'உண்மையாகிய மெய்க்காவ லனாகிய ஒருவன் என்று போ. வ. ச. (பக்கம் 43) கூறும். திருமுடியில் கண்டோஜி என்றுள்ளது (பக். 143); (சிவச்சத்திரபதியில் "ஏசாஜி கங்கு" (Yesai Kank) என்று உளது (பக். 190); சிவதிக் விஜயம் பக்கம் 169).

15. அப்சல்கானைக் கொன்ற பிறகு நடந்த போரில் பகைவர்கள் விட் டுச்சென்ற பெ ருள்களில் நான்கில் ஒரு பங்கு அந்தணர்களுக்கும், எஞ்சியவற் றுள் நான்கில் ஒரு பங்கு சைனியங்கட்கும் கொடுத்தார்; பின்னும் எஞ்சியவற் றைக் "கஜானா தாக்கல்' செய்யும் படி ஆணையிட்டார் (பக்கம் 145). -

16. அப்போரில் இறந்த பீம சேனாபதிக்கு இறுதிக்கடன்களை நடத்தி அப்பதவியை நெத்தோஜி பால்கருக்கு அளித்தார்.

17. கார்தலப்கானுக்கு உதவியாக வந்த ராஜா வியாக்கிரி ஒரு பெண் பிள்ளை யென்பது (பக். 188).

18. சிவாஜிக்கு இரண்டாவது மகன் பிறந்தபொழுது "குப்புறக்கவிழ்த்து பூ பார்வையாய்ப்' பிறந்ததாகப் பக்கம் 209இல் உள்ளது.