பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 தஞ்சை மராட்டிய

இது போசல வமிசாவளி என்று கூறப்பட்டபோதிலும், வராகராசா - ஏகராஜன் - பரசோஜி, - பாபாஜி - மாலோஜி - ஷாஜி - இவருக்கு மூன்று மக்கள் ஏகோஜி, சம்பாஜி, சிவாஜி - ஏகராஜன் மனைவி தீபாம்பாள் - அவளுக்கு மூன்று பிள்ளைகள் - மூத்தவர் ஷாஜி - இவருக்கு இரண்டு தம்பியர் என்று இந்நூல் 1-29 செய்யுட்களினின்று அறியவருகின்றது."

இந்நூல் 38 பாடல்களையுடையது. இந்நூல் ஷாஜியைப் பற்றிக் கூறும் நூல் ஆகும்.

போசல வமிசாவளியை இயற்றியவர் கங்காதர மகி என்பவராவர். குவலயா நந்தம் என்ற வடமொழி நூலுக்கு இவர் ஒருரை இயற்றி யுள்ளார். அவ்வுரைக்கு முன்னுரையில் இந்நூல் இடம் பெறுவதாக உள்ளது. எனினும் இது தனி நூலாகவே கருதப்படுவதாயிற்று.

பர்னல் (Burnell) அவர்களின் புத்தக அட்டவணையில் 5021 ஆம் எண் ணாக இச்சுவடி பதியப்பட்டுள்ளது.

இந்நூலைப் பற்றி "ஸாஹேந்திரவிலாஸ்' என்ற வடமொழி நூலில்' முன்னுரை பக்கம் 24 இல் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

“The Bhosala Vamsavali of Gangadhara: Tanjore Ms. 4232. This has no doubt a separate manuscript existence and has been considered even by the diligent Kuppuswami Sastri as an independent work.... Its author Gangadhara is none other than the well known Gangadharadhvarin, author of the Rasikaranjani on Appayya Dikshit's Kuvalayananda and other works”.

13 இவ்விருபத்தொன்பது வடமொழிப் பாடல்களையும் தமிழில் மொழிபெயர்த் துதவியமை யோடு இந்நூல் பற்றிய செய்திகளையும் கூறி உதவியவர், தஞ்சைச் சரசுவதி மகால் நூல் நிலையத்து வடமொழிப் புலவர் திரு. என். ரீநிவாசன் ஆவர்.

14. Tanjore Saraswathi Mahal Series, No. 54; Sahendra Vilasa of Sridhara Venkatesa (Ayyaval); Edited with Historical lntroduction and notes by Dr. V. Raghavan (1952).