பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

பொதுவாய் இலங்குவது பற்றிச் சிவத்துக்கு எடுக்கும் கோயில்களில் சிவனை நடுவில் வைத்துக் குறிஞ்சிக்குரிய முருகனையும் முல்லைக்குரிய மாயோனையும் பாலைக்குரிய கொற்றவையையும் பிறவற்றையும் பரிவார தேவதைகள் என்ற பெயரால் சூழவைத்துச் சமய ஒருமை கண்டவர் பழந்தமிழர்.

இவையேயன்றி, ஊர்தோறும் அன்பர்கள் கூடிப்பரவுமிடந் தோறும் தெய்வங்கட்குக் கோயில்கள் இருந்தன. இவற்றின் வேறாக,

காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்

தெய்வ வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றன. கந்துடை நிலை என்றது பிற்காலத்தே சிவலிங்கம் என மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது. சிவவடிவம் கந்தும், அதன் பீடம் நிலையுமாகும். இவ்வுண்மையறியாத மடவோர் கந்தினை ஆண்குறி என்றும் நிலையினைப் பெண்குறி என்றும் பிதற்றினர். சிலர் இப்பேதைமையை மானவுணர்வின்றி எழுத்தால் வரைந்து விட்டனர் அறிவுடைமையாக எண்ணிப் பொய்க் கதைபுனைந்து மனத்தே தெய்வ வழிபாட்டில் உயிர்ப்பலியும் குருதி கலந்த சோறும் படைக்கப் படுவதுண்டு. எங்கும் விளக்குகளை ஏற்றித் தெய்வங்கட்கு நீராட்டிப் பூச்சூடி மணி இயக்கி நறும் புகை எடுப்பர்; அக்காலை பலவேறு வாத்தியங்களும் முழங்கும். பின்னர்ப் பலவேறு நிறமுடைய பூக்களைத் தூவி வழிபாட்டுக் குரிய செல்வங்களைப் பரவுவர்.முருகனை வழிபடுவோர், கையால் தொழுது காலுற வணங்கி,