பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82



      வணங்கு மருந்தால் மந்திரத்தால்"

எனவும் கூறியுள்ளமை கொண்டு மணி மந்திரம் மருந்து என்னும் மும்முறைகளை அறியலாம்.

மக்கள் நலமாய் வாழ்வதற்கான தமிழ் மருத்துவக் கலைகளிலுள்ள மணி, மந்திர, மருந்தெனும் மூவகை முறைகளில் முன் இரண்டு முறைகளில் மறைந்து கிடக்கும் மணி, மந்திர மெனும் பொருளைப் பற்றி நமக்குத் தெரிந்த வரையில் விளக்கிக் கூற வேண்டியது கடமையாகும்.

மணி

மணி என்பது காலம். காலத்தை அளிப்பது தினமணியாகிய கதிரவனேயாகும்; கதிரவனாகிய விண்மணி வெளிப்பட்டு நம் கண்மணியிற் கலந்தாலன்றிப் புற இருள் நீங்கிப் பொருள்களை நாம் காணவியலாது. "கதிரவன் ஒளியே யன்றிக் கண்ணுக்கோர் ஒளியுமில்லை.” ஞாயிற்றின் ஒளி காலை, மாலை சிறிது, நேரமாவது நமது கண்ணிலும் உடம்பிலும் கலத்தல் வேண்டும். அதனால் நமது கண்ணொளி கெடாமலிருப்பதோடு, தலையிலுள்ள மூளையும் பலப்படுகிறது; நினைவு வன்மையுண்டாகிறது; இளமையில் நரைக்காது; மயிர் உதிராது; தலை வழுக்கை ஏற்படாது.

“ஆதித்தனுதித்த மூன்றே முக்கால்
       அறிந்து பிணிக்கு மருந்து செய்வீர்
ஆதித்தனுதித்த மூன்றே முக்கால்
       அறிந்து பிணிக்கு மருந்து கொள்வீர்
ஆதித்தன் சாட்சியாய்ப் பிணிதீரும்
       அயனம் விருத்தமும் வாராதே"