பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

நான்கு குணம், ஆகப் பதினாறு குணங்களும் கண்டு மருத்துவம் செய்யப்பட்டால் ஒரு பிணியாளி பிணி நீங்கிப் பிழைக்கும் வாய்ப்பு உண்டாகும்.

மணி மந்திரம் மருந்து

தமிழ் மருத்துவக் கலையில் மணி, மந்திரம், மருந்தென மூவகை முறைகளிருக்கின்றன. இக்காலத்தில் முன் இரண்டு முறைகளும் மறைந்து கிடக்கின்றன. அதனால் இக்கால மக்கள் உடல் உரமின்றி நோய்வாய்ப்பட்டு விரைவில் மாளுகின்றார்கள். அப்பர் அடிகள்.

"பேராயிரம் பரவி வானோரேத்தும் பெம்மானை
பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும்
தந்திரமும் மருந்துமாகித் திராதநோய்
தீர்த்தருள வல்லான் தன்னை”

எனவும், தாயுமானார்,

"மணிமந்திர மாதியால் வேண்டுசித்திகள் உலக
மார்க்கத்தில் வைக்கவிலையோ'


எனவும், இராமலிங்க வள்ளலார்,

“மருந்தறியேன், மணியறியேன், மந்திரமொன் றறியேன் மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை யறியேன்”
எனவும், மருத்துவன் இலக்கணம் என்னும் நூல்,

“குணங்கள் குறிகள் நாடியினால் குறித்து மனத்தின் திடமதனால்பிணங்கியேறும் பிணிபலவும் பினமுன் கண்டுதானறிந்து