பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

என ஆதித்தன் என்னும் ஞாயிற்றைப் பற்றி மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. வேதாந்த சைவ சித்தாந்த சமய தத்துவ நூல்களில் மணி மந்திரம் மருந்தைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன.

மணி என்றால் மனத்தை ஒன்றில் நிறுத்தி ஒரே நாமத்தைப் பலகால் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் செபம் செய்கிறவர்கள் கையில் பிடித்து எண்ணும் மணிக் கோவையை (செபமாலை) மணி என்றும், இரசத்தை மணியாகக் கட்டுவது இரசமணி என்றும் பலர் கூறுவர். அவை பொருந்தா, உடம்பில் ஆடையின்றிச் சிறிது நேரம் சூரிய ஒளி உடம்பில் படும்படி காய்வதால் உடம்பிலுள் வியர்வைக்கால் மயிர்க்கால்கள் வழியே கதிரவன் ஒளி ஊடுருவிச் சென்று உடம்பிலுள்ள செந்நீர் தூய்மையடைகிறது. நோயனுகாமல் காப்பாற்றுகிறது, உள்ள நோய் ஒழிகிறது. இம்முறைகளை அனுபவத்தில் கண்ட நம் முன்னோர்கள் காலை மாலை ஆறு, குளம், கிணறு முதலிய நீர் நிலைகளில் மூழ்கிக் குளித்தவுடன் கொஞ்ச நேரமாவது சூரியனைக் கண்ணால் பார்த்து உடம்பிலும் வெய்யில் படும்படி காய்ந்தார்கள். கண்ணும் கருத்தும் கெடாமல் உடல் வன்மை நினைவு வன்மையோடு நெடுநாள் நலமாயிருந்தார்கள்.

ஞாயிறு வழிபாடு

தமிழர் உடல்நல முறையும், சமயமும் ஒன்று கலந்துவிட்டது. நம் முன்னோர்கள் காலை, மாலை வழிபாடு செய்யாமல் உணவு உண்பதில்லை. ஆண், பெண் இரு பாலாரும் காலையில் கீழ்த்திசையில் ஞாயிறு கண்ணுக்குத் தெரிந்தாலும் கண்ணுக்குத் தெரியாமல் மேகத்தால் மறைக்கப்பட்டிருந்தாலும் ஞாயிற்றின் ஒளிவட்டத்தை அகக் கண்ணால் பார்த்து மண்டியிட்டு