பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"

என்று திருவள்ளுவரும் இதையே கூறுகின்றார்.

சில நோயாளிகளுக்கும், பல மருந்துண்டு அலுத்தவர் கட்கும் இயற்கை மருத்துவம் செய்வார்கள் பத்தியம் எனக் கூறி உணவை மாற்றுவார்கள். உள்ளப் பிணியாளர்களை, மன நோயாளர்களை, இருக்கும் இடத்தை விட்டு "ஸ்தல யாத்திரை போகச் சொல்லுவார்கள்.

இரண வைத்தியம் - அறுவை மருத்துவம்

இக்காலத்தில் நடைபெறுவதைப்போல் அக்காலத்தில் இரண மருத்துவம் நடைபெற்றிருக்குமா எனச் சிலர் சந்தேகப்படுகின்றார்கள்.

"உடல்தனில் தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் மாற்றிச் கடலுறச் கட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்”

எனக் கம்பராமாயணத்தில் கம்பர் கூறுவதாலும்,

"வாளால் அறுத்துச் சுடினும் மருத்துன்பால்
மாளாத காதல் நோயாளன் போல்"

என ஆழ்வார் நாலாயிரப் பாடலில் கூறுவதாலும் சில நோய்களுக்கு உடம்பில் சில இடங்களில் சுட்டும், அறுக்க வேண்டிய இடங்களை அறுத்தும், பழைய நாட்களில் மருத்துவம் செய்துள்ளார்கள் என்று தெரிகின்றது. ஆனால் இக்காலத்தைப்போல் இவ்வளவு அறுவை மருத்துவங்கள் அக்காலத்தில் இல்லை. இத்தகைய நோய்களும் அக்காலத்தில்