பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 ஒதல் பகையே துரதிவை பிரிவே, வேண்டிய கல்வியாண்டு மூன்று இறவாது என்ற நாற்பாக்களானும். ஒதல் பிரிவுடைத்து ஒருமூன்று யாண்டே என்ற நம்பியகப்பொருள் நூற்பாவானும் உணரலாம். IV. சில கல்விக் கொள்கைகள் 1. Gurośgppä (Adjustment) மாணவனே, வாழ்க்கை, சமூகம், சூழ்கிலே இவற் றிற்கேற்பப் பொருத்தமுறச் செய்வதே கல்வியாகும் என்று இக்காலக் கல்வி வல்லுநர்கள் கூறுவதையே கம் திருவள்ளுவப் பெருந்தகையார். உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் என்ற குறளில் கூறிச் சென்றுள்ளார். உலகக்கோடு ஒட்டி வாழ்வதற்கே பலவற்றைக் - ம். அப்படிக் கற்றும் உலகக்கோடு ஒட்டி வாழாதவன் அறிவற்றவனே என்ற கருத்து பொருத்த முறல் முறைக்குப் பொருத்தமாகக் கோன்றவில்லேயா ? 2. கல்வி என்ற பொருளைப் போட்டுவைக்கும் காலிப் பெட்டியல்ல மாணவன். அவன் எல்லா ஆற்றல்களையும் தன்னுள்ளே கொண்டிருக்கும் விதையைப் போன்றவன். அவன் உள்ளே தாங்கிக் கிடக்கும் ஆற்றல்களைத் தாண்டி விடுவதுதான் கல்வி. ஆற்றல்களேத் தொழிற்படுத்தி இயங்கச் செய்வதே பயிற்றல் என்று கல்வி வல்லுநர்கள் கூறுகின்றனர். இதை, 177 தொட்டினைத் துறும் மணற்கேணி மாந்தற்குக் கற்றனைத் துறும் அறிவு "என்று என்ருே கான் கூறிவிட்டேனே ! அதைப் புரிந்து கொள்ள இத்தனே நாற்ருண்டுகளா தேவைப்பட்டன ' என்று கேட்காமல் கேட்கின் ருர் கம் தெய்வப் புலவர். மணற்கேணியில் தண்ணிர் இயற்கையாகவே இருக் கின்றது. யாரும் வெளியிலிருந்து கொணர்ந்து ஊற்றிவிட வில்லை. அவ்வாறே அறிவு தன்னுள்ளே யிருக்கின்றது. அது நூற்களால் தாண்டப்பட்டுச் சிறப்படைகின்றது: தோண்டுவதற்கேற்ப ர்ே கிடைப்பதுபோன்று படிப்பதற் கேற்ப அறிவு வளர்கின்றது என்ற வள்ளுவர் கருத்து வெளிநாட்டுக் கல்வி வல்லுநர்கள் கருத்திற்கு அரண் செய்கின்றது. மேலும் நன்னூலில் நான்காம் வேற்றுமைக் கொடைப் பொருளின் பிரிவாகிய 'ஏலாது ஏற்றல்' (பெருமல் பெற்றுக்கொள்ளல்) என்பதற்கு 'ஆசிரியன் மாளுக்கர்க்கறிவு கொடுத்தான்' என்ற சான்று கூறப் பட்டுள்ளது. மாணவன் ஆசிரியரிடத்திலிருந்து எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அறிவுதான் அவனிடத்திலேயே அமைந்து கிடக்கின்றதே. இருப்பினும் அவன் எதையோ ஏற்றுக் கொண்டான். அதுதான் தாண்டுகலாகும். இவற்றையெல்லாம் எண்ணிப் பாராமலா அதைச் சான்றைக் கூறியிருப்பர். 3. கண்டதைக் கற்றுக் காலத்தையும், பணத்தையும் முயற்சியையும் வீணுக்கக்கூடாது. படிக்கவேண்டியதைப் படிக்க வேண்டும் வாழ்க்கையோடு தொடர்புடைய, வாழ்க்கைக்குப் பயன்படத் தக்கவற்றையே கற்கவேண்டும் என்று ஆதாரக் கல்விபோன்ற கல்விமுறைகள் சூறு, கின்றன. வெள்ளேயர், குமா ஸ்தா படிப்பு முறையிலே;