பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

282

இப்பாயிரப் பாடல் அகராதி நிகண்டைப் பற்; அறிந்து கொள்வதற்குரிய அகச் சான்ருய் அமை! துள்ளது. இப்பாடலினல் அறிந்து கொள்ளும் இன்று யமையாத செய்திகள் சிலவற்றை ஈண்டு மீண்டு தொகுத்துக் காண்பாம் :- இந்நூல் ஒரு சொல் ப பொருட் பெயர்ப் பிரிவைச் சார்ந்தது ; அகர முத வகரம் ஈருகப் பத்துத் தொகுதிகளை உடைய அகராதி முறையில் அமைந்தது நூற்பா நடையா ஆனது மொத்த நூற்பா 3868 : சொற்கட்கு ஒ பொருள் (அர்த்தம்) முதல் நாற்பத்தாறு பொருள்வரை கூறப்பட்டுள்ளன ; நூலின் பெயர் அகராதி நிகண்டு; நூல் எழுந்த காலம் சக ஆண்டு 1516 (கி. பி. 1594).

இவ்வளவு செய்திகளையும் உள்ளடக்கிக்கொண் டிருக்கும் இப்பாயிரம், அகராதி நிகண்டை ஆராய விரும்புவோர்க்கு அருந்துணை புரியும் என்பதில் ஐயமில்லை.

இனி, சொற்பொருள் கூறும் நூற்பாக்கள் சில வற்றைக் காண்பாம். மற்ற நிகண்டுகளினும் இக் நிகண்டில் இன்னுெரு புதுமையும் உண்டு. அதாவது, ‘அ’ என்னும் எழுத்தை முதலில் உடைய சொற்களை முதலில் கிறுத்தியிருப்பதிலேயே மேலும் ஒரு புதுமை யைப் புகுத்தியுள்ளார் ஆசிரியர். அதாவது, ஒரே ஒரு பொருள் (அர்த்தம்) மட்டும் உடைய சொற்களை எல்லாவற்றிற்கும் முதலில் அமைத்துள்ளார் ; இந்தப் பகுதிக்கு 'அம் முதல் ஒரு பெயர்’ என்று தலைப்பு தரப்பட்டுள்ளது. 'அம் முதல் ஒரு பெயர் என்ருல், 'அ' என்னும் எழுத்தை முதலில் பெற்று ஒரே ஒரு பொருள் தரும் சொல் - என்று பொருளாம். இதற்கு