பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

413

413

விக்கவேண்டும் என்னும் திட்டம் 1911 - ஆம் ஆண்டில் சென்னை அரசின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட டது. அரசு முயற்சி எடுத்துக்கொள்ளவே, அகராதி அமைப்புக்குழுவும் ஆசிரியர் குழுவும் தோன்றின. அக ராதி வேலையின் மேலாட்சிப் பொறுப்பு சென்னைப் பல் கலைக் கழகத்திடம் (University of Madras) ஒப்படைக்கப் பட்ட து. ஆசிரியர் குழுவின் தலைவராக (Chief Editor) ரெவரன்ட் ஜே. எஸ். சண்ட்ல ர் (Rev.T. S. Chandler)

அமர்த்தப்பட்டார்.

நான்!

ஒருவிதமாக 1913 சனவரியில் அகராதி வேலை தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இடையில் முதன்மையாசிரியர் பதவியிலிருந்து சண்ட்ல ர் விலகிய தால் 1922 - இல் . சு. அனவரத விநாயகம் பிள்ளை அவ் விடத்திற்கு அமர்த்தப்பட்டார். பின்பு அவரும் விலகியதால் 1924 - இல் சி. பி. வேங்கடராம ஐயர் அமர்த்தப்பட்டார். பின்னர் அவரும் விலகியதால் 1926 - இல் எஸ். வையாபுரிப்பிள்ளை அமர்த்தப்பட்டார். இவர் முதன்மையாசிரியர் பொறுப்பில் இறுதிவரையும் நிலையாக இருந்து அகராதிப் பணியை முடித்து வைத்தார். முதன்மையாசிரியர்க்குத் துணையாசிரியர் களாக, நன்கு கற்றுத் தேர்ந்த அறிஞர் பலர் அமர்த்தப் பட்டுப் பணிபுரிந்தனர்.

பல்லாண்டுகளையும் பன்னூறாயிரம் ரூபாய்களை யும் பலருடைய உழைப்பினையும் விழுங்கிவிட்ட இத் தமிழ்ப் பேரகராதி மொத்தத்தில் பெறும் பயன் தரத் தக்கதொன்றாம். இதனைப் பயன்படுத்துவோர்க்கு உதவும்படியாக இதன் தொடக்கத்திலும் இறுதியிலும் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புக்கள் மிகவும் பாராட்டம் பாலவை.