பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

414

இனி, இவ்வகராதியின் மாதிரிக்காக, 'அஃகுதல் என்னும் சொல்லுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருள் விளக்கங்கள் வருமாறு:

அஃகு - தல் (1) akku, 5 v. intr. [K. akkudisu.] Prob. அல்கு - , 1. To be shortened, as a vowel ; அளவிற் குறுகுதல். (நன்னூல் - 60). 2. To be reduced , to shrink; சுருங்குதல். 'கற்பக் கழிமடம் அஃகும்' (நான் மணிக். கடிகை - 29). 3. To be dejected; மனங்குன்றுதல். 4. To be acute, refined; நுண்ணிதாதல். 'அஃகியகன்ற அறிவு' (திருக்குறள் - 175). 5. To pass away; கழிந்து போதல். 'அல்லாயிரமாயிரம் அஃகினவால்' (கம்பராமாயணம் - அயோத்தியா காண்ட ம் - 69). 6. To become closed, com - pressed, as a flower ; குவிதல். 'ஆம்ப ல் ........ மீட்ட ஃகு தலும் (காஞ்சிப் புராணம் - திருக்கண். 104).

அஃகு (2) akku, N. < அஃகு - Oozing water ஊறுநீர். (திவாகர நிகண்டு).

மேலே முதல் பத்தியில் அஃகு என்னும் வினைச் சொல்லுக்குரிய ஆறு பொருள்களும், இரண்டாம் பத்தியில் அஃகு என்னும் பெயர்ச் சொல்லுக்குரிய ஒரு பொருளும், பல்வகை அடையாளக் குறிகளுடனும், ஆங்கில விளக்கத்துடனும், இலக்கியச் சான்றுகள் ளுடனும் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். (K. akkudisu) என்றால், அஃகுதல் என்பது கன்னட மொழியில் 'அக்குடிசு என்று வழங்கப்படும் என்று பொருளாம். இவ்வாறே மற்ற குறிப்புக்களையும், அகராதியின் தொடக்கத்தில் தரப்பட்டுள்ள அடை யாள் விவரங்களின் படிப் படித்தறிந்து கொள்க.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற படி, மேலே தரப்பட்டுள்ள ஒரு மாதிரியிலிருந்தே இவ்வகராதியின் பெரும்பயன் புலனாகுமே!