பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

38



இறுதியிலேயே ஒரு புலவர் செய்து முடித்தே விட்டார். கி. பி. 1594-ஆம் ஆண்டில் சிதம்பர இரேவண சித்தர் என்னும் புலவர் ‘அகராதி நிகண்டு’ என்னும் பெயரில் ஒரு நூல் இயற்றினார். இச் செய்தியை, அந்நூலின் பாயிரப் பகுதியில் அவரே பாடியுள்ள

“அரிய சகாத்தம் ஆயிரத் தைஞ்ஞாற்று
ஒருபத் தாறென உரைத்திடும் ஆண்டினில்
.................................................அகராதி நிகண்டென
ஓதினன் யாவரும் உணர்ந்திட நினைந்தே.”

என்னும் பாடற் பகுதியால் அறியலாம். சக ஆண்டு 1516-இல் இயற்றியதாக ஆசிரியர் அறிவித்துள்ளார். சக ஆண்டுடன் 78 ஆண்டுகள் கூட்டிக் கொண்டால் கி.பி. ஆண்டு கிடைக்கும். எனவே, சக ஆண்டு 1516 என்றால், கி. பி. 1594-ஆம் ஆண்டில் அகராதி நிகண்டு இயற்றப்பட்டது என்பது தெளிவு.

சொற்கள் அ, ஆ, இ, ஈ என்ற அகரவரிசையில் முறைப்படுத்தப்பட்டிருத்தலின், இந்நூல் ‘அகராதி நிகண்டு’ என்னும் பெயர் பெற்றது. தமிழில் முதன் முதலில் ஏற்பட்ட அகராதி நூலே இதுதான்-அகராதி என்னும் சொல்லை முதன் முதலாகக் கற்றுக் கொடுத்ததே இதுதான்-இக்காலத்தில் சொற்பொருள் விளக்கும் நூல் வகைகளையெல்லாம் அகராதியென்னும் பெயரால் நாம் அழைப்பதற்கு மூலஊற்று இதுவேதான்.

உலக முதல் அகராதி :

அகராதி நிகண்டு தமிழ் மொழியில் தோன்றிய முதல் அகராதி மட்டுமன்று; இதுவரைக்கும் தெரிந்-