பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

429

429

போன்ற செய்திகளுடன், இக்காலத்திலுள்ள பல் துறைக் கலைச் செய்திகளும் மிகவும் விரிவாக விளக் கப்பட்டுள்ளன. பல்வகைக் கலைகளைப் பற்றிய அறி வையும் பெற்றுக் கொள்ளத் தக்க களஞ்சியமாக இப் படைப்பு இருத்தலின் இது கலைக் களஞ்சியம் என்னும் பெயர் பெற்றது. இதனை ஆங்கிலத்தில் என்சைகிளோ பெடியா ' (Encyclopaedia ) என்ப ர்.

உலகத்தில் இருந்த இருக்கிற இன்றியமையாத எந்தப் பொருளைப் பற்றியும் - யாரைப் பற்றியும் தகுந்த பட விளக்கங்களுடன் தெரிந்து கொள்ள உதவும் கலைக் களஞ்சியங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய ஐரோப்பிய மொழிகளில் விரிவாக உள்ளன. அத்தகு அரும் பெரும் படைப்பு தமிழ்மொழியில் இல்லாத குறையை இந்தக் கலைக் களஞ்சியம் தோன்றிப் போக் கியது. இத் தமிழ்க் கலைக் களஞ்சியத்தில் இடம் பெற் றுள்ள கலைகளின் பெயர்கள் வருமாறு:

தமிழ், உயிரியல், தாவரவியல், விலங்கியல், புவி யியல், காட்டியல், தத்துவம், சமயம், உளவியல், அற வியல், அளவையியல், ஆங்கிலம், நாடகம், இசை, நடனம், மானிடவியல், தொல் பொருளியல், வரலாறு, அரசியல், பொருளியல், பெளதிகம், இரசாயனம், ஓவியம், சிற்பம், கட்டடச் சிற்பம், மொழியியல், கல்வி, பொறியியல், தொழில் நுட்பவியல், பொரியல், சுரங்கவியல், சட்டம், பூகோளவியல், மருத்துவம், இரண சிகிச்சை , உளவியல், உடலியல், உடல் நலவியல், கால் நடை மருத்துவம், சமசுகிருதம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, கணிதம், வானவியல், புள்ளியியல், விவசாயம் முதலியன.