பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 111

குருக்கள் மாரே பயன்படுத்தியதால் இதை அலெக் சாந்திரியாவிலிருந்த கிளெமென்ட் என்ற ஆசிரியர் புனித அல்லது குருக்கள் முறை (Heratic) என்று அழைத்தனர் இந்த எழுத்து வாணிகப்பத்திரங்கள், கடிதங்கள், கல்வெட்டில் வெட்டவேண்டிய வாசகத்தின் பிரதிகள் முதலியவைகளை எழுதப் பயன்படுத்தப்பட்டது இவ்வெழுத்து முறையைக் கோயில்களில் நடைபெற்ற பள்ளிக்கூடங்களில் கற்றுக்கொடுத்தனர் மாணவர்கள் இலக்கிய, சமய நூல்களைப் பிரதிகள் செய்து, இவ் வெழுத்து எழுதுவதில் திறமை உடையவராயினர்

சித்திர எழுத்து குருக்கள் எழுத்து மக்கள் எழுத்து பொருள் C ‘’s தந்தை یہ .1多 T_ لا يكون) 〜さ盗 で三方 <三f வாழ்

மருத்துவ, கணிதப் பப்பைரருகளில் இந்த எழுத்தே காணப்படுகிறது

சாதாரண மக்கள் இன்னும் எளிதாகவும் விரை வாகவும் எழுதும் முறையை உண்டாக்கினர் அது ‘மக்கள் முறை (Demotic) என்று வழங்கப்பெறும் இம்முறையில் பல இலக்கிய நூல்களும், குருக்கள் மார்கட்டளைகளும் எழுதப்பெறினும் இம்முறையைப் பெரும்பாலும் வணிகர்களும் வழக்கு அறிஞர்களுமே பயன் படுத்தினர் அக்காலத்தில் பாடசாலைகளில் குழந்தைகளுக்கு முதலில் மக்கள் முறையும், இறுதியில் கல்வெட்டு முறையும் கற்றுக்கொடுத்து வந்தனர்.

எகிப்தியர் 1 முதல் 9 வரை எண்களை எழுதக் குட்டையான நேர்குத்துக் கோடுகளைப் பயன்படுத்தினர் 1 முதல் 3 வரை ஒன்று முதல் மூன்று நேர்கோடுகள், 4 என்பதற்கு இரண்டு மேலே இரண்டு கீழே; 5 என்பதற்கு மூன்று மேலே இரண்டு கீழே; 6 என்பதற்கு மூன்று ம்ேலே மூன்று கீழே; 7 என்பதற்கு நான்கு மேலே மூன்று கீழே 8