பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 த. கோவேந்தன்

கூறியது 'க' என்ற தலைப்பில் விளக்கப் பெற்றுள்ளது அவர் கொள்கை ‘ச்னு என்பதற்கு முழுவதும் ஒத்து வரலில்லை. மெல்லெழுத்தின் பின் ஜ என்ற ஒலிபெறும் (உஜ்ஜயினி உஞ்சை என்பது இதனாலோ?), உயிரிடையே அந்த ஒலி பெறாது ப0 என்ற ஒலியே பெறுகிறது; மொழி முதலில் இன்று ப0 அல்லது ஸ என்ற ஒலி பெறுகிறது. வடிமொழிச் சொற்கள் தமிழில் வரும் போது, ப0 என்பன ச என்றே எழுதப் பெறுதலும் காண்க ஆனால், யாழ்ப் பாணத்தில் ச் என்பது இடையில் ஒற்றாக வந்தால் ஒலிப்பது போலவே மொழி முதலிலும் ஒலிக்கப்பெறும் மலையாளத்திலும் அவ்வாறே ஆம். ச் என்ற ஒலியன் (Phoneme) ஒன்றே ஸ், ஜ என்ற மாற்றொலியன்களாக (Allophones) வழங்கும் என்றலே பொருத்தம் (பார்க்க க). பல ஒலியாக மாறுவதற்குக் காரணம் பின் முன் வரும் ஒலிகளின் சார்பே ஆம் என முன் கூறிய விளக்கம் காண்க

“ச என்ற ஒலி மொழி முதலிலும் உயிரிடையிலும் Sha என்பதில் வரும் சுர முயர்ந்த ஒலியுமாகாது, Shore என்பதில் வரும் தாழ்ந்த ஒலியுமாகாது, பல் ஈற்றின் பின்னே நாவின் அலகு ஒற்ற இதழ் குவிதலின்றி Sit என்பதிற் போல ஒலிக்கும் எழுத்தாம்; அ, உ, ஒ என்பவற்றோடு மொழி முதலாகும்போது S போலாம்: உயிரிடையே பிற வல்வெழுத்துப்போல இதுவும் ஒலிப்பெழுத்தாம் (voiced). இ, ஏ யோடு மொழி முதலாகும்போதும், வல்லெழுத்தின்பின் வரும்போதும் இது பல்லீற்றின் பின் நா நுனியன்றி நாவின் அலகு இதழ் கவியாது ஒற்றப் பிறக்கிற டக்ர ஒலியோடு வருவதாய் வெடியொலி நலிந்ததோர் உரசெழுத்தாய் (Africate) ஒலிக்கும். வல்லொற்றின் பின் டகர ஒலி சிறந்து நிற்கும்; இறுகிவும் நிற்கும் றகரத்தின் பின்னோ குறுகி ஒலிக்கும். இங்கெல்லாம் ச என்பது தகரம் ககரம் என்ற இரண்டின் இடைப்பட்டதாம்” என்பர் ஜே. ஆர் பிர்த்து (J. R. Firth) என்ற ஆசிரியர் மற்றையார் (உ.ம்:MurrayFavior) ககரத்தைப்