பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 121

பற்றிக் கூறியதனை இங்கும் கொள்க இன்று உயிரிடையே வரும் ச என்பது ஜ என ஒலிக்கவில்லை; மெல்லெழுத்தின் பின்னரே அவ்வாறாம்.

இன்று, சிலவிடங்களில் ச மொழி முதலில் ஜ என்று ஒலிக்கிறது. சிலவிடங்களில் மொழி முதலிலும் ச்ச என்பதுபோல் ஒலிக்கும்.

வெடி உயிர்ப்பொலியே இதன் பழைய ஒலி எனலாம். கை=செய்; கெவி=செவி முதலியவற்றை ஆராயும்போது இந்தச் சகரம் பழையதொரு ககரம் - வல்லண்ணத்தின் அருகில் ஒலித்த ககரம் என்று கொள்வதற்கு இடம் உண்டு வல்லண்ண உயிரோடு வந்த ககரமே இவ்வாறு மாறினது போலும். தொல்காப்பியர் காலத்தில் ச் என்பது அகரத்தோடு மொழி முதலில் வருவதில்லை சங்க நூலில் பல சொற்கள் ச எனத் தொடங்குகின்றன. சா என்பது இறந்த காலவினை எச்சமாகும்போது சத்து என வருதல் வேண்டும்; மலையாளத்தில் அவ்வாறுதான் வருகிறது. ஆனால் தமிழில் செத்து என அகரம் எகரமாக் ஒலிப்பது காண்க. இதனாலேயே தொல்காப்பியர் ‘ச மொழிக்கு முதலாகாது என்றார் போலும் (பார்க்க : அ)

சகரம் இடையண்ண எழுத்தானால் அதற்கு ஒத்த இடை எழுத்து யகரமாகும். சகரம் (ரூ) மசானம் = மயானம் என யகரமாதலும் உண்டு. பெயர், ஹெசர் எனக் கன்னடத்தில் வரும் தமிழில் உயிர், உசிர் எனப் பேச்சு வழக்கிலும் வரும் மை=மசி: பைம் பொன் (பயிம்பொன் = பசும்பொன்; பச்சைப்பொன்) எனவும் வரும். இங்கெல்லாம் சகரமே முதல் எனக் கொண்டார் அறிஞர் கால்டுவெல். யகரமே பழைய வடிவம் எனக் கொள் வோரும் உண்டு.

சகரம் இன்று ஒலிக்கும் முறையினையும் தொல் காப்பியம் முதலியன அதன் பிறப்பினைக் கூறுவ தனையும் ஒத்திட்டுப் பார்க்கும்போது இடைவல்லண்ண எழுத்தாக இருந்தது இப்போது கடைவல்லண்ண