பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 த. கோவேந்தன்

எழுத்தாக மாறியுள்ளது எனலாம் டகரக் கூறோடு ஒலித்தது தகரக் கூறோடு ஒலிக்கின்றது எனலாம்

பல் ஒலிகள் (Dentals) வல்லண்ண ஒலிகளாக (Palatals) ஒலிக்கும் போக்குத் தமிழில் ஒரு காலத்து எழுந்தது சிலப்பதிகாரத்திலிருந்து தேவாரம் வரை அந்தப் போக்குத் தொடர்ந்திருந்தது ஐந்து - அஞ்சு என்பது போன்றவை அந்நாளில் தொடங்கியவை இன்னும் பேச்சுவழக்கில் நிலைத்துப்போய் விட்டன பிற் காலத்தே ஞாயிறு = நாயிறு என்பது போல வல்லன எழுத்துப் பல்லெழுத்தான போக்குத் தொடங்கிய போது சகரமே பல்லொலிக்கருகே வந்துவிட்டமையால் தகரமாக வில்லைபோலும் ஆனால் மாசம் = மாதம் என வருதல் Ꮡ%fT©ᏑTö

சகர ஒலி சில மொழிகளின் முதலில் இருந்தது ஒரு காலத்துக் கெட்டது என்பர். சபை=அவை; சதிய புத்திரர் = அதியபுத்திரர் (புத்திரர் = மகன்-மான்) = அதியமான், சேனாதி=ஏனாதி, செட்டி = எட்டி என்பவையே அன்றிச் சான்றோர் = ஆன்றோர் முதலியவற்றையும் சங்ககால வழக்கெனக் காட்டுவர் சிலர்

வடமொழியில் வரும் ஸ என்பவற்றையும், ச என்ற சவர்க்க வல்லெழுத்து நான்கினையும் தமிழில் ச என்றே எழுதுவர்; ஆங்கிலZ,s என்பனவும் (Dozenடசன்: Bus பசு) இலக்கியத் தமிழில் ச என்றே எழுதப்பெறும். இதற்கு ஒத்த உருது முதலிய உரசொலியை உயிரிடை வரும் சகரமாகவும், Church என்பவற்றில் மொழியிடை கடை வரும் (Ch) ஒலியை ‘சர்ச்சு என இரட்டிய சகரமாகவும் எழுதிவருகின்றனர். ஷ, ஸ, ஜ என்ற எழுத்துக்களையும் நெடுங்கணக்கில் வைத்து இன்று மாணவர் பயில் கின்றனர். பகடிம் என்பது பக்கம் என்றே அல்லாமல் பச்சம் என r:கரம் இரு சகரமாகவும் வரும் ஷ என்பது டி என்றே அல்லாமல் சிலபோது ரிஷி = ரிசி என்பதிற்போலச் சகரமும் ஆம்

ச என்பது கூட என்ற பொருளில் வரும் உபசர்க்க மாக மொழிக்கு முன்னிலையாய் வருவதனைத் தமிழில்