பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 த. கோவேந்தன்

காண்கிறோம் அவற்றில் சில தமிழிலும் புகுந்துவிட்டன இவை தகரமாகவே பெரும்பான்மையும் தமிழில் ஒலிக்கின்றன தகரம் டகரமாயின போலும், வட மொழியிலிருந்தும் பல சொற்கள் டகர முதலாக வரத் தமிழில் புகுந்துள்ளன முன்னெல்லாம் பிற மொழி டகர முதற் சொற்கள் தமிழில் புகும்போது இ என்பதனை முந்து இசையொலியாகப் பெற்று வரும் நன்னூலில் 'யவ்விற்கு இய்யும்’ என்ற பாடத்தினை 'டவ்விற்கு இய்யும் என்று கொள்வாரும் உண்டு டம்பம் இடம்பம் என வரும் வடமொழி, இந்த, உருது, மராத்தி, ஆங்கிலம் முதலிய மொழிகளின் அரசியல் தொடர்பால் டகரம் மொழிக்கு முதலாக வருவது தமிழிலும் இயல்பாகி விட்டது டகர முதற் சொற்கள் 98, டா முதல் 39, டி முதல் 20, டீ முதல் 12, டு முதல் 2 டு என்ற ஒலிக் குறிப்பாக வழங்கும் குழந்தைச் சொற்கள் டெ முதல் 4 (அவற்றில் மூன்று ஆங்கிலம்), டே முதல் 6, டை முதல் 4 இவற்றோடு Tie என வழங்கும் கழுத்தணியையும் சேர்த்தால் ஐந்தாம்), டொ முதல் 9, டோ முதல் 21, டெள முதல் 1 (டெளல்) எனக் காண்கிறோம் (தமிழ் லெக்சிக்கன்).

இவற்றில் பல சொற்றொடர்களாக வருதலின் டகரம் தமிழில் பயின்றுவரும் நிலையை இதிலிருந்து அறியலாம் இவை ஒலிப்பொலியாகவும் (d) ஒலிப்பிலா ஒலியாகவும் (t) சென்னையில் வழங்கக் காண்கிறோம். டோல் (do : 1) என்பது ஒலிப்பொலியானால் (துங்கும் மஞ்சம், சதுரப்பாடான பேச்சு) ஒரு பொருளும், ஒலிப்பிலா ஒலியினால் (சுங்கம்) வேறு பொருளும் தருவதால் இருவேறு ஒலியன்களாம்

இந்த வேறுபாடு கடன் வாங்கிய மொழிகளிலுள்ள வேறுபாட்டை ஒட்டியது இலக்கிய மொழியிலோ, நாட்டுப்புறமக்கள் மொழியிலோ இந்த வேறுபாடு தோன்றுவது அருமை. இந்த வேற்றுமை கொண்டு, கற்றோர் அல்லது நகரத்தார் பேச்சையும், பிறர்