பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 143

பேச்சையும் பிரித்தறியலாம் மொழிக்கிடையே ஒலிப் புடை ஒலியாகவே டகரம் வரும். சில இடங்களில் இந்த ஒலிப்பு மிகச் சிறியதாகவும் அடியோடு இல்லாது மறைந்தும் வரக் காண்கிறோம் உரசு எழுத்துப் போலச் சிறிது நெகிழ்ந்து ஒலிக்கவும் காண்போம் டகரம் இரட்டும்போது ஒலிப்பிலா எழுத்தேயாம். இங்கேயும் இப்படி இரண்டாக எழுதப்பெறும் எழுத்துகள் ஒலியில் ஒரெழுத்துப் போலவே ஒலிக்கக் காண்கிறோம் வீடு (Viddu), வீட்டு (Vittu) என்பனவற்றில் டகரம் ஓர் ஒலியாகவே ஒலிக்கும் ஆனால் முன்னதில் டகரம் ஒலிப்பொலி, பின்னதில் ஒலிப்பிலா ஒலி பிற மொழி களைத் தமிழில் எழுதும் முறையில் இவ்வாறு மொழிகளிடையும் ஒலிப்பிலா ஒலியும் ஒலிப்புடை ஒலியுமாக டகரம் வேறுபட்டு இருவேறு ஒலியன் களாதல் காண்க இந்த முறை எழுந்ததன் காரணம் தமிழிலும் மொழியிடையில் முன்னெல்லாம் இரட்டித்து வந்து இன்னும் இரண்டாக எழுதப்பெறும் டகரம், ஒலிக்கும் போது இரண்டாகவன்றி ஏறக்குறைய ஒன்றான ஒலிப்பிலா ஒலியாக ஒலிப்பதாலேயே ஆம்

இது நா நுனியால் எழும் ஒலியாதலின் இதன் பின்னர் நா துனியால் பிறவாத வல்லெழுத்துகளை நாவானது எழுப்புவது எளிது. அதனால் ட் என்பதன் பின் க, ச, ப என்பன தமிழில் வரும். வெட்கம், வெட்சி, பெட்பு எனக் காண்க. ஆனால் டகரத்தின் முன் பக்டம் என்பன போல இவை வராமை தமிழ் ஒலி முறையின் இயல்பாம். எனவே ட் என்பதன்முன் ட், க், ச், ப் என்ற ஒலிகளே தமிழில் வரும். பிற மெய்கள் வரின் இடையிசை யொலியாக இன உயிர் எழுத்துக்கள் வரும். நாட்யம்= நாட்டியம் (இ); குட்மலம்-குட்டுமலம் (உ) இது நன்னூல் கூறும் பொது விதியே (149ஆம் சூ.) ஆம் கட்டில் போன்றவை பேச்சு வழக்கில் இப்போது கட்ல், கட்லு என ஒலிப்பதால் ட் என்பது தனியலகு பெறும்