பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 157

பொருள் : எரிந்து போதல், பயிர் கருகுதல், காந்துதல், சீறுதல், அழிதல் என்ற தன்வினைப் பொருளிலும், இவற்றிற்கேற்பப் பிறவினைப் பொருளிலும் வினைப் பகுதியாகவும், நெருப்பு, விளக்கு, சடராக்கினி, வெகுளி, தீமை, நஞ்சு, நரகம் என்ற பொருளில் தமிழ்ப் பெயராகவும், ஞானம் என்ற பொருளில் வட மொழியி லிருந்து வந்து தமிழில் வழங்கும் பெயராகவும் வரும்

தீயைப் பயன்படுத்த மனிதன் எப்படிக் கற்றான் எனத் திட்டமாக எவராலும் கூற முடியாது. இடி விழுந்து தீப்பற்றிய மரத்திலிருந்தோ, தீயைக் கக்கும் எரிமலையிலிருந்தோ, உராய்வதால் மூங்கில் காடுகள் தீப்பற்றுவதிலிருந்தோ தீயைப்பற்றி மனிதன் அறிந்து தன் உணவைச் சமைக்கவும், குளிரைப் போக்கவும், காட்டு விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும் அதைப் பயன்படுத்தினான். இயற்கையில் உண்டாகும் தீயையே பாதுகாத்துப் பயன்படுத்தி வந்த மனிதன் இரு கற்கள் ஒன்றோடொன்று மோதும்போது தீப்பொறி பறப்பதையும், உலர்ந்த மரங்கள் உராய்ந்து தீப்பற்றுவதையும் கண்டு, செயற்கை முறையில் தீயை உண்டாக்கமுயன்று, தீ மூட்டும் முறைகளை ஆராய்ந்து முன்னேறி, நவீன தீக்குச்சியையும் (த க) செய்யக் கற்றான்.

தீயைப் பற்றிப் பல புராணக் கதைகள் உண்டு. பாரசீக இலக்கியத்தில் ஒரு வீரன் வேதாளத்தோடு போராடும்போது, அவன் வீசியெறிந்த ஒரு கல் குறி தவறிப் பாறைமீது பட்டுத் தீ உண்டானதாக ஒரு கதை உள்ளது. தீ சுவர்க்கத்திலிருந்து வந்த ‘சம்பூதம்’ என்று கிரேக்கர் கருதினர். பிரமீதியரூ என்ற வீரன் சுவர்க்கத் திலிருந்து தீயைத் திருடிக்கொண்டு வந்ததாகவும் கிரேக்கர் கதை கூறுகிறது. கிட்டத் தட்டப் பண்டைய புராணக் கதைகள் எல்லாவற்றிலும் தற்செயலாகவோ மனித சக்திக்கு அப்பாற்பட்ட வழியிலோ தீயைப்பெற்ற பகுதி உண்டு. கடவுளின் ஒரு கொடையாகவும்,