பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 : த. கோவேந்தன்

மாறியது பந்து என்பது போலத் தகரத்தின் முன் வரும் இடங்களில் மட்டும் தகரத்திற்கு ஒத்த பல் எழுத்தாகவே இது ஒலிக்கும். தமிழ், மலையாளம் முதலிய சில மொழி களிலன்றிப் பிற திராவிட மொழிகளில் ன, ந என்ற இரண்டெர்லியும் ஒன்றாயின. பல்லின் வேருக்கும் ஈற்றுக்கும் சிறிது மேலாக ஒலிக்கும் னகர ஒலியின் ஒலியே இதன் ஒலியாக மாறியது. பந்து என்பது போலத் தகரத்திற்கு ஒத்த பல் எழுத்தாகவே இது ஒலிக்கும் தமிழ், மலையாளம் முதலிய சில மொழிகளிலன்றிப் பிற திராவிட மொழிகளில் ன-ந வேற்றுமை இல்லை அஞ்ஞை (அன்னை), செய்குந முதலிய சங்கால வழங்குக் களே சில திசைச் சொற்களில் இவ் வேறுபாடு மறையத் தொடங்கி யதனைக் காட்டும் எனலாம்

பொருள் : ந என்பது நக்கீரன் என்பதிற் போலச் சிறப்பினையும், நக்கரைந்து (மிகக்கரைந்து) என்பதிற் போல மிகுதியினையும் குறிக்கும் தமிழ் முன்னிடாகவும் (Prefix), நமித்திரர் (மித்திரர் அல்லாதார்) என்பதிற் போல எதிர் மறையைக் குறிக்கத் தமிழில் வந்து வழங்கும் வடமொழி முன்னிடாகவும் (உபசர்க்கம்) வழங்கும்.

ந, நா, நி, நீ, து, நூ, நெ, நே, நை, நொ, நோ, நெள என்பன உயிர்மெய் எழுத்துகள் மொழிக்கு முதலில் நகரம் எல்லா உயிர் எழுத்துகளோடும் வரும் நகரம் வெரிந், பொருந் என்ற இரண்டு சொற்களில் பழங் காலத்தில் ஈறாகி வந்தது. நகர ஈறு உகரச்சாரியை பெறுவது இயல்பாயிற்று வெரிந் வென் என மாறியது; பொருந் பெரும்பான்மையும் வழக்கற்றது

இக்கால ந்த ந் ந நா நி நீ து நெ தே நை நொ நோ என்ற எழுத்துகள் கல்வெட்டில் சிறப்பு வடிவம் பெற்று வழங்காமை அறிக (பார்க்க : தே, தோ)