பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 த. கோவேந்தன்

இரட்டை றகரம் இரட்டைத் தகரமான போதும், ரகரம் சிலர் பேச்சில்-பொதுவாகக் கற்றோர் பேச்சில்-ஒலிக்கக் காண்கிறோம் வெற்று-வெட்ரு எனக் காண்க. இரட்டை றகரம் யாழ்ப்பாணத்தில் t என்ற ஆங்கில ஒலியைக் குறிக்கப் பயன்படுகிறது. (Peter= பீற்றர்).தனக்கு ஒத்த மெல்லெழுத்தின் பின்வரும் றகரம் அங்கு d என்ற ஆங்கில எழுத்தின் ஒலியே பெறுகிறது. (இன்று-இன்டு) தமிழ் நாட்டின் சார்பால் இதனை மாற்றவும் பலர் அங்கே முயல்கின்றனர். முன்கூறிய காரணத்தால் தமிழ் நாட்டில் இந்த ஒலியின்பின் ரகரம் ஒலிக்கக் காண்கிறோம் (இன்று=இன்ட்ரு).

ரகரம் தொல்காப்பியர் காலத்தில் றகரமும் ழகரமும் பிறந்த இடத்திலேயே பிறந்தது. எனவே நாமடி ஒலியே ஆம் ஆனால் றகரம் ஒற்றப் பிறக்க, ரகரம் வருடப் பிறந்த (Fricative) ஒலிப்புடை உரசொலியாகும் இன்று ரகர றகர வேற்றுமை இல்லாத இடங்களில் ரகரம் அண்ணத்தின் முன்னிட ஒலியாகவும், ழகரம் பின்னிட ஒலியாகவும் அமையக் காண்கிறோம் யகர ழகரங்கள்போல ரகரத்தின் பின்னும் இரண்டு மெய்யொலிகள் வரும் (பார்த்து, சேர்ந்து) இதன் முன்னும் மொழிக்கு முதலாகும் எழுத்துகள் வரும் மொழிக்கு முதலில் தனிக்குறில் வரும்போது ரகரம் தனி மெய்யாக நிற்பதில்லை. அதனால் சர்க்கரை சருக்கரை என்றே பழங்காலத்தில் வழங்கியது பிற்காலத்தில் இந்த நியதி இல்லை. உழிதர்கின்றேன் என்று அப்பர் பாடும்போது இல்லை எனலாம்.

ரகரம் மொழிக்கு முதலாகப் பழங்காலத்தில் வருவதில்லை. வடமொழிப் பயிற்சி மிக்க சிந்தாமணி காலத்திலும் ஒட்டக்கூத்தர் காலத்தும் முதலில் வந்த துண்டு. இன்று வருவது இயல்பாகிவிட்டது. மொழி முதலாகாத காலத்தில் ரகரத்தின்பின் உ ஊ ஒ ஓ என்ற எழுத்து வரும்போது, உகரம் முதல் ஒலியாக வரும்.