பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 229

(உரோகம் உருசி). பிற இடங்களில் இப்போது இகரம் முந்து ஒலியாக அமைகிறது. (இராமன், இரேவதி, இருடி). ஆனால் சங்க கால்த்திலும் பின்னும் ரகரம் அகர ஆகாரங்களோடு வந்தபோது இகரமன்றி அகரமே முந்தொலியாக வந்தது (ராகம்=அராகம், அரதனம்) ரகரம் ஈறெற்றாகர் ர என வருவதில்லை உயிர் எழுத்தின் பின்னன்றி ரகரம் எங்கும் வருவதில்லை. அப்படி வரும் பிற மொழிச்சொற்கள் தமிழாகும்பொழுது அக் கூட்டுமெய்யொலியைப் பிரிக்க மெய்யினிடையே உயிர் ஒலி தந்து வழங்குவது வழக்கம். வடமொழிப் பயிற்சி மிகுந்ததாக முன்காட்டிய காலத்திலும் இன்றும் இந்தத் தடையில்லை. ஆனால் பழைய வடிவங்கள் இன்றும் வழங்கு வனவற்றில் முன்னாளில் அகரம் இடை ஒலியாகவும், பின்னாளில் இகரம் இடை ஒலியாகவும் அமைந்திருப்பதைக் காண்கிறோம் (சக்ரம்=சக்கரம்சக்கிரம்). பிராகிருதச் சொற்களில் இந்த ரகரம் மறைந்த வடிவங்கள் தமிழில் பழங்காலத்தில் வழங்கக்காண் கிறோம் (விரதம் =வதம்: பூர்வம்=புவ்வம்). சர்க்கரை சருக்கரை என ஆதலை முன்னரே குறிப்பிட்டோம். பொதுவாகத் தமிழில் உயிரோடு ஒத்த யகர ழகரம்போல், பேச்சொலி நிறுத்தம் (Pause) வினைமுற்று , எழுவாய், உயர்திணைச்சொல் முதலிய இடங்களில் வரும் போதன்றிப் பிற இடங்களில் சொல்லின் ஈற்றில் வந்தால் வருமொழி முதலில் வரும் வல்லெழுத்து இரட்டிக்கும். (ஊர்க்கால்). ரகர ஈறு வினைமுற்றாய் இருந்தாலன்றிப் பிற்காலத்தில் பிற மெய்யெழுத்துகளைப்போல உகரச் சாரியையை ஈற்றில் பெற்றுவரும். (சேர்>சேரு). இந்த உகரம் சில இடத்து மறையும். இதனால் வல்லெழுத்தாம் றகரம் ரகரமாக மாறியபோதும், அது குற்றியலுகரத் தோடு ஈறான நிலையில், உகரத்தை இழந்து ஈ என்றே நிற்கக் காண்கிறோம். (வயிறு-வயிர். பாலாறு = பாலார்). இரண்டு மெய்யெழுத்துகளின் முன்வரும் ரகரம் பேச்சு வழக்கில் கேட்டிருக்கக் காண்கிறோம். (சேர்ந்தான்