பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 த. கோவேந்தன்

இந்த எழுத்தில் சிறு குறுக்குக்கோடு ஒரு சிறிய படுக்கைக் கோடாயிருக்கிறது மங்களேசாவின் பாதாமி சாசனமும், புலிகேசியின் ஐஹொளே சாசனமும் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும். ஒன்பதாம்-பத்தாம் நூற் றாண்டுகளின் ராஷ்டிரகூட சாசனங்களில் மேலும் சற்று வளர்ச்சி காணப்படுகிறது அதில் தொடக்கத்தில் எழுத்துகள் சற்றுத் தட்டையாயிருக்கின்றன. பிற்கால மேலைச் சாளுக்கிய எழுத்திலிருந்து ஹொய்சள எழுத்து உண்டாயிற்று ஹொய்சள எழுத்தில் பேனா வீச்சுகள் மலிந்தும் சிறு குறுக்குக்கோடு திட்டமான இரட்டைக் கோடுகளாகவும் காணப்படுகின்றன. விஜயநகர சாசனங் களின் எழுத்து இதிலிருந்து வளர்ந்தது. அந்த எழுத்துச் செயலளவில் கன்னட, தெலுங்குப் பிரதேசங்களில் ஒன்றேயாகும் இக் காலத்துக் கன்னட எழுத்துப் பிற் காலத்தில் மாறித் தெலுங்கிலிருந்து சற்றே மாறுபடு வதாயினும், விஜயநகர சாசன எழுத்தே கன்னட, தெலுங்கு நாட்டில் வழங்கின.

கன்னடப் பிரதேசத்தில் ஏற்பட்ட முன்னேற்றத் தைப்போல் தெலுங்கு நாட்டிலும், 7, 9, 10, 11, 13ஆம் நூற்றாண்டுகளின் வளர்ச்சியில் குறிப்பிட்ட கட்டங்கள் காணப்படுகின்றன. நான்காம் நூற்றாண்டிலுண்டான சாலங்காயன எழுத்துமுறை தொடக்கத்தில் பிராமி முறையாகவேயிருந்தது. ஆறாம் நூற்றாண்டு விஷ்ணு கந்தின் எழுத்தில் ஒரு திட்டமான மாறுதல் காணப்படு கின்றது கிழக்குச் சாளுக்கிய எழுத்துத்தான் ஏழாம் நூற்றாண்டுக்கும் பிற்பட்ட நூற்றாண்டுகளில் பெற்ற வளர்ச்சியைக் காட்டுகின்றது. ஆனால் பத்தாம் நூற்றாண்டில் தான் தெலுங்கு எழுத்து கீழைச் சாளுக்கியரின் ஆதரவில் நன்கு உருவாயிற்று. சிறு குறுக்குக் கோடு பதினோராம் நூற்றாண்டில் V வடிவம் போன்ற இரட்டைக் கோடுகளாக ஆயிற்று. வளர்ச்சியின் அடுத்தத் கட்டம், காகதீய சாசனங்களிலும், அதன் பிறகு