பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோறறமும் வளர்ச்சியும் 243

பின் பிராகிருதங்களாக வளர்ந்தன; இவற்றிற் சில வழக்குக்களிலிருந்து எழுந்து இலக்கியத்திற்காகக் கையாளப்பட்டு, இலக்கணம் வகுக்கப்பட்டு, எல்லா விடங்களிலும் எல்லோராலும் ஒரே முறையில் கையாளப்படும்படி அமைந்ததே சமரூ கிருதமாகும் இது பாணினியின் இலக்கணம் துவங்கிக் காப்பிய, நாடக, சாத்திரங்கள் அடங்கிய பரந்த இலக்கியத்தில் காணப்படும் மொழியாகும்.

பேச்சுக்கம் இலக்கியத்திற்கும் இடையே, இலக்கணக் கட்டுப்பாடுகளைப் பலவாறாகத் தளர்த்திப் பேச்சு முறைகளைத் தழுவிய சில இலக்கியங்களும் எழுந்தன (எ-கா) இதிகாசங்களும் பெளத்த சமரூ கிருதமும் இவற்றிற் காணப்படும் மொழி பிராகிருதம் சமரூ கிருதம் இரண்டுக்கும் இடையே உள்ளதொரு நடை இதைச் சில ஆராய்ச்சியாளர் காதா (காதை) நடை என்பர்

உலக வழக்கிலுள்ள மொழியை நாட்டின் பிரிவைக் கொண்டு, வடக்கு மேற்கு, தெற்கு, நடுநாடு, கிழக்கு என்று பிரித்து, இந்தப் பிராந்தியங்களில் வழங்கிய மொழிகளை, முதல் அல்லது மூலப்பிராகிருதங்கள் என்று சொல்ல லாம் இவற்றிலிருந்து இடைக்காலத்தில் இலக்கியத்திற்கு உதவியதும் பேச்சு வழக்கில் இருந்து வந்ததுமான பிராகிருதங்கள் உருவெடுத்தன.

வடக்கத்திய பிராகிருதத்தின் வழிவந்தவை, வட மேற்கு, இமயமலை முதலிய இடங்களில் வழங்கின. மேற்கே பேசப்பட்டதிலிருந்து வளர்ந்தன்வை ஆவந்தி, லாடி, செளராஷ்ட்டிரி என்றவை. தெற்கே பேசப்பட்டதி லிருந்து தோன்றியது மகாராஷ்ட்டிரி. நடுநாடென்ற மத்திய தேச மொழியிலிருந்து வந்தது செளரசேனி. கிழக்கத்துப் பேச்சிலிருந்து தலையெடுத்தவை, மாககி, அர்த்தமாகதி என்பவை. பாலி என்ற பிராகிருத மொழி மேற்கேயும் வழங்கிற்று, கிழக்கேயும் வழங்கிற்று. இவற்றைத் தவிர, வேத மொழிக்கு நிகரான பழமை