பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

27

எழுத்து (வரிவடிவம்)

எழுத்து என்பது எழுதப் படுவது என்ற பொருள் உடையது. ஆதியில், மனிதன் நாம் எழுதுவது போல எழுதுவதற்குக் கற்றுக்கொண்டவன் அல்லன் மக்கள் தாம் கருதுகின்ற பொருள்களைக் குறிக்க அப்பொருள் களை அப்படியே கொடுத்து விட்ட நிலையொன்று உண்டு என அறிகிறோம் உதாரணமாக, பாரசீக தேசத்து மன்னன் தரையசு என்பவனுக்குச் சித்தியர்கள் ஒரு துது அனுப்பினதாக இசுராடோட்டசு என்னும் கிரேக்க வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார். பகைவர் அஞ்சியோடிப் பதுங்காவிட்டால் இறந்துபடுவர் என்பதே அத் துதின் செய்தி ஆனால் இஃது எழுத்தில் எழுதப்பட்டதன்று ஒர் ஆள்வசம் தவளை, எலி, அம்புகள் ஆகியவை அனுப்பப்பட்டன. இவை குறித்த கருத்து, பகைவரெல்லாம் தவளை தண்ணிருள் ஒளிப்பது போலவும், எலி வளைக்குள் நுழைவது போலவும் மறையாவிட்டால் அம்புகளால் கொல்லப்படுவர் என்பதே எனவே, எழுத்து வழியே கருத்தினைப் புலப் படுத்த மக்கள் கற்றுக்கொள்ளுதற்கு முன்பு அவ்வப் பொருள்களையே அறிகுறி வகையான் ஆண்டனர் என்பது விளங்கும்

அதன் பின்னர்க் கருத்துகளை வரைந்து காட்டினர் உதாரணமாக, எகிப்து தேசத்தில் காணப்படும் ஒர் ஒவியத்தில் முட்டை வடிவமான ஒர் அடிநிலத்தில் சில செடிகள் காணப்படு கின்றன; அந்த அடிநிலத்திலிருந்து