பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 31

வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் நன்கு அறியப் படுகிறது. பாண்டி மண்டலத்தை வென்று தன் ஆட்சிக்கு உட்படுத்திய முதல் இராசராச சோழன், அதற்கு முன் அந்நாட்டில் வழங்கி வந்த வட்டெழுத்துகளை நீக்கித் தொண்டை மண்டலத்திலும் சோழ மண்டலத்திலும் வழங்கிய தமிழ் எழுத்துகளையே பயன்படுத்துமாறு செய்தனன்.

இச் செய்தி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குற்றாலத்தில் காணப்படும் இரண்டு கல்வெட்டு களால் இது புலனாகின்றது எனவே, 11ஆம் நூற்றாண்டு முதல் பாண்டி மண்டலத்தில் இப்போது உள்ள தமிழ் எழுத்துகள் வழங்கி வருகின்றன இத்தமிழ் எழுத்து களைப் பல்லவர்கள் கிரந்த எழுத்துகளிலிருந்து அமைத்துக் கொண்டு, தம் ஆட்சிக்குட்பட்ட தொண்டை மண்டலம் சோழ மண்டலங்களில் வழங்கிவருமாறு செய்தனர் என்று ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர் பல்லவர்கள் அமைத்த தமிழ் எழுத்துகள் வழக்கிற்கு வருமுன் அந்நாடுகளில் வழங்கிவந்த எழுத்துகள் வட்டெழுத்துக்களேயாம். எனவே, பண்டைக் காலத்தில் தமிழ் நாடு முழுமையும் வட்டெழுத்துகளே வழங்கியுள்ளன என்பது உணரற்பாலது கடைச் சங்க காலத்தில் சேரமண்டலத்திலும் சோழ மண்டலத்திலும் வழங்கி வந்த தமிழ் எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்ற பெயருடையனவாயிருந்தன என்பது சிலப்பதிகாரத்தால் அறியக்கிடகின்றது இவ் உண்மையைக் கண்ணெழுத் தாளர் காவல் வேந்தன்-மண்ணுடைமுடங்கலம் மன்னவர்க்களித்து (சிலப் 26 170.171) எனவும், எனவும், இருபதினாயிரம்-கண் எழுத்துப்படுத்தன கைபுனை சகடமும் (சிலப் 26 :135-136) எனவும், 'வம்பமாக்கள் தம் பெயர் பொறித்த-கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல் பொதி (சிலப் 5 ; 111-12) எனவும் போதரும் இளங்கோ அடிகளது வாக்கினால் நன்குணரலாம் இவ்வடிகள் குறித்துள்ள கண்ணெழுத்துகள் என்றும் வழங்கப் பட்டனவாதல் வேண்டும் இவ்வட்டெழுத்துகளில்