பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 த. கோவேந்தன்

இருந்துதான் பல்லவர்கள், கிரந்த எழுத்துகளையும் இக்காலத்துள்ள தமிழ் எழுத்துகளுக்கு அடிப்படையாக வுள்ள பழைய தமிழ் எழுத்துகளையும் அமைத்துக் கொண்டனர் என்பது அறியத் தக்கது

தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்கள் பண்டைக் கால முதல் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்துள்ளன என்பதை நன்காராய்ந்து அறிந்துள்ள கல்வெட்டுத்துறை அறிஞர்களும், பழைய வட்டெழுத்துகளிலிருந்தே இப்போது வழங்கும் தமிழ் எழுத்துகள் தோன்றியுள்ளன என்று கூறியிருப்பது ஈண்டுக் குறிப்பிடத் தக்கது

இவ் வட்டெழுத்துகள், அசோகச் சக்கரவர்த்தியின் பிராமி எழுத்துகளிலிருந்து தோன்றி வளர்ச்சியடைந் தவை என்று டாக்டர் பூலர் கூறுகின்றார் (Indian Palaeography p 73) தமிழ் நாட்டிற்கு ஆரியர்கள் வந்து தம் நாகரிகத்தைப் பரப்புவற்கு முன்னரே இவ் வெழுத்துகள் தோன்றியிருத்தல் வேண்டும் என்றும், அதனால் இவை பிராமியின் வழித்தோன்றியனவாக இருத்தற்க இடம் இல்லை என்றும் பிராமி எழுத்துகளுக்கு ஆதாரமாகக் கருதப்படும் பீனிவிய எழுத்துகளிலிருந்து பண்டைக் காலத் தமிழ் மக்கள் இவ் வட்டெழுத்துகளிலிருந்து பண்டைக்காலத் தமிழ்மக்கள் இவ் வட்டெழுத்துகளை அமைத்துக்கொண்டிருத்தல் வேண்டும் என்றும் L fré frt Israordi, G. Djäläärprisi (Elements of South Indian Palaeography p 49), இவ்வறிஞர்களின் கருத்துகள் ஈண்டு ஆராய்தற்குரியன

இந்தியாவில் வழங்கும் பழைய மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று இதற்குரிய இலக்கண நூல்களுள் மிக்க பழமை வாய்ந்தது தொல்காப்பியம் அந் நூலின் ஆசிரியராகிய தொல்காப்பியனார் வடமொழி வியாகரண ஆசிரியராகிய பாணினி முனிவர்க்கு முற்பட்டவர் என்பது அறிஞர்கள் கண்ட முடிவு அத்துணைப் பழங்காலத்தே விளங்கிய அவ்வாசிரியர், வடசொற்கள் தமிழில் வந்து வழங்கும் போது வட