பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 45

(சிந்தாமணி 530) என்பது போன்ற இடங்களில் அகரம் அசை நிலையாக வந்தது என்பர்

சாரியைகளை எல்லாம் பழைய வேற்றுமை உருபுகள் என்பர் அறிஞர் கால்டுவெல் அகரம் ஆறாம் வேற்றுமைப் பன்மையுருபாக வரும் (தன கைகள்) இரண்டாம் வேற்றுமை உருபாம் ஐகாரம் பழந் தமிழில் அ எனவும் வரும் கானநாடனைக் களிறஞ்சும்மே = கானநாடனக் களிறஞ்சும்மே (தொல்காப்பியம் 591)

தன் கைகள் என்பது போன்ற இடங்களில் வரும் தன என்பது, வினையாலணையும் பெயராம் என்று கொள்வோரும் அகரம் பலவின்பால் விகுதியே என்று கொள்வோரும், உண்டு ஒருமை பன்மைகளில் வெவ் வேறு உருபு பெறுவதும், இஃது அஃறிணை விகுதி யாதலின் அஃறிணையில் வரும்போது மாறாது, உயர்திணை கொண்டு முடிவும்போது ‘கு’ என மாறுவதும் இதனை வலியுறுத்தும் என்பர் (தொல், 5177) பல என்பதில் ஈற்று அகரம் பலவின்பாற் பெயர் விகுதி, வந்தன என்பதில் பலவின்பால் வினைமுற்று விகுதி. செய் என்னும் வாய்பாட்டு வினை எச்சத்திலும் அகரம் விகுதியாக வருகிறது செய்கின்ற, செய்த என்ற வாய்ப்பாட்டில் வரும் நிகழ் கால இறந்த காலப்பெய ரெச்சங்களின் விகுதியாகவும் விகுதியாகவும் அகரம் வரக் காண்கிறோம் தற்கிழமையும் பிரிதின் கிழமையுமாம் வேற்றுமைப் பொருளினையே அகரம் எங்கும் குறிக்கும் என்று கொள்வோரும் உண்டு ஓங்க, நீங்க என்ற இடங்களில் அகரம் வியங்கோள் விகுதியாக வருகிறது

அ என்பது வாரான் என்பதுபோன்ற இடங்களில் எதிர்மறையைச் சுட்டி ஆன் என்பதில் கலந்து விட்டது என்று கூறுவோரும், அல் என்பதன் மரூஉவே அந்த அகரம் என்று கூறுவோரும் உண்டு

தமிழில் மொழிக்கு முதலில் வாராத ரகரத்தில் தொடங்கும் மொழிகளின் முதலில் அகரம் தமிழோசை