பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 81

எழுத் 2 உரை). மூன்று புள்ளியும் ஒன்றாகச் சேர இடையே கோடுகள் அவற்றை இணைத்து வரும் படி எழுதியதனைக் குறிக்கின்றார். இதன் பயனாகக் கூ' என்ற வடிவம்போல, ஆய்தம் எழுதப்பெறவும் காண்கிறோம் நச்சினார்க்கினியர் கூ’ என்ற வடிவத்தைக் குறிக் கின்றாரே அன்றிக் கல்வெட்டில் நடுவே உள்ள வளைவுக் கோட்டினைக் குறிக்கவில்லை எனலாம் கல்வெட்டில் உள்ள வடிவம் நச்சினார்க்கினியர் காலத்திற்கும், பல நூற்றாண்டுகள் முந்தியதாகலின் "இக்காலத்தார் வழக்கு” என நச்சினார்க்கினியர் அதனைக் குறித்தல் இயலாது 'முப்பாற் புள்ளி’ என்று தொல்காப்பியர் குறித்ததற்கு வேறு பொருள் கொண்டமையாலேயே அடுப்புக் கூட்டுப்போன்ற வடிவம் ஆய்தத்திற்கு அமைந்தது. ‘கூ’ என்று எழுதும் போது கல்வெட்டில் கண்ட இடைக்கோடு இங்கும் நீண்டிருக்கக் காண்கிறோம்

8ஆம் நூற்றாண்டு காசாக்குடிச் செப்பேடு .است 9ஆம் நூற்றாண்டு வரகுணன் திருச்செந்தில் கல்வெட்டு. حاتمه

இது க் என்ற மெய்யெழுத்தினையும் க் அ என ஒலிக்கும் உயிர்மெய் எழுத்தினையும் குறிக்கும். க் என்பது தமிழ் மெய்யெழுத்து வரிசையில் முதல் எழுத்தாகும்; இந்திய நாட்டு மொழிகள் எல்லாவற்றிலும் அவ்வாறே ஆகும் க் என்ற மெய்யெழுத்தினை எளிதே ஒலித்துக் காட்டுவதற்காக அ என்ற எழுத்துச் சாரியை சேர்த்து, க என வழங்குவர்; மேலும் கரம் என்ற சாரியை சேர்த்துக் ககரம் என்றும் வழங்குவர் அனா, ஆனா என்ற