பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

கள் தடவி, பிறகு பால் கொடுக்க வேண்டும். மீதி எண்ணெய்யை கைக்குழற்சியிலும் காற்குழற்சியிலும் தடவவேண்டும். இருவகை மாந்தமும் உடனே விலகும்.

செல்லம்: கைக் குழற்சி, காற் குழற்சி என்பது எது பாட்டி?

பாட்டி: முழங்கை முழங்கால்களில் உட்புறம் நரம்புகள் உள்ள மெல்லிய இடம்.

செல்லம்: மாந்தக் கட்டை எங்கே கிடைக்கும்:

பாட்டி: எது எல்லா மலைகளிலும் விளைகிறது. என்றாலும், அது திருச்சிக்கு தெற்கே உள்ள சிறு மலையிலும், வடக்கேயுள்ள கொல்லிமலையிலும் அதிகமாக விளைகிறது. நம் நாட்டில் ஒவ்வொரு பெரிய குடும்பங்களிலும் அது இருக்கும். சில மருந்துக் கடைகளிலும் விலைக்குக் கிடைக்கும். விலை 0-12 காசுக்கு மேலிராது.

செல்லம்: அக் கட்டை எப்படி இருக்கும் பாட்டி?

பாட்டி: சந்தன மரத்தின் வேரைப் போல இருக்கும். ஆனால் சிவந்த நிறமாக இருக்காது. அதன் மேற்பட்டையைச் சீவிப்பார்த்தால், தூய வெள்ளைநிறமாக இருக்கும். பார்வைக்கு அது ஒரு வேரைப் போலவும், மரவள்ளிக் கிழங்கைப் போல வளைவு நெளிவாகவும் இருக்கும்.

செல்லம்: மாந்தக் கட்டையைவிட நல்லது ஒன்று மில்லையா, பாட்டி?

பாட்டி: இருக்கிறது. குழந்தைகளின் அணைப்பிலிருக்கிற உன்னைப்போன்ற பெண்கள், கணவனது அணைப்பிலிருந்து சிறிது விலகி இருப்பதே அதைவிட நல்லது. இன்னும் உன்னைப் போன்ற பெண்கள் மாம்பழம், கொய்யா, பலாச்சுளை, நிலக்கடலை முதலியவை களை வெறுத்துவிடுவது நல்லது.