பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 131

கொளற்குக் காரணம் யாது? உலகுக்கெல்லாம் தனிநாயகியான உமையம்மை கண்டு மகிழவும், புவனங்களெல்லாம் உய்திபெறவும், பெருமான் ஆடல் புரிகின்றான்; நான்மறைகளும் ஆடும் சேவடியலப்பும் சிலம்பின் ஒலியைப் பேணிப் பரவு கின்றன; ஆகவே, நாமும் வலம் வந்து வணங்குவோம் என்று கருத்தால் வலம் கொள்கிறது என்பாராய், “இடமருங்குதனிநாயகி.புடை சூழும்” என்று உரைக் கின்றார். -

கிடங்கில் கரையெடுத்து வானளாவி உயர்ந்த மதில் நிற்கிறது. உயர்ச்சி பற்றி முகிலினம் அதன் உச்சியிற் படிந்து தவழ்கிறது.

மதிலும் கிடங்கும் தரும் இனிய காட்சி ஆரூரரின் தமிழ் உள்ளத்தில் அளவிறந்த அன்பு பெருகு விக்கிறது. மகிழ்ச்சி மிகுகின்றார்.

அகழியின்கண் தாமரைகள் மலர்ந்து விளங்கு கின்றன; அவற்றின் தாது படிந்துண்ட வண்டினம் கரையில் நின்று மலரும் கைதையிற் படிந்து மேனி வெளிதாகிப் பூத்தோறும் சென்று சென்று பாடு கின்றன. வண்டின் காட்சி சிவனடியார்களின் செயலை உள்ஸ்ரீத்து நிற்பது சேக்கிழார்க்குத் தெரிகிறது. தாமரைமலர் செல்வமனையாகவும், அதன்கண் உறைந்த வண்டினம் செல்வத் தொண்டர் களாகவும் கைதைப் பொடி கலந்து வெண்ணிறம் பெற்றது வெண்ணிற்றில் மூழ்கிய திறமும் பூத்தொறும் வண்டு சென்று முரல்வது அத்தொண்டர் பரவும்