பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 55

கற்பிக்கப்பட்டன. பொருளறியாத வடமொழியில் கற்பிக்கப்பட்ட தமிழர், இவற்றைச் செய்வதேயமை யும்; கோயில் வழிபாடு இன்றியமையாத தொன் றன்று என்றெண்ணி, கோயில்கட்குச் செல்வதை விடுத்தனர். இவற்றைக் கற்பிப்பாரும் கற்போரும் குருடும் குருடும்கூடிக் குருட்டாட்டமாடுவது போலப் பொருளறியாத வடமொழியில் தீக்கையும் சிவபூசையும் பெறுவித்தும் பெற்றும் ஆண்டவனும் அடிமையும்போல ஒழுகலாயினர். இவற்றைக் காண்போருள் அறிவுடையோர், அருவருப்புற்றும், பொருளில்லார் அச்சமுற்றும் நீங்கினர். கோயிற்குச் செல்லும் தகுதியுள்ளோருட் பலர் ஆங்குக் காணப் படும் உயர்வு தாழ்வு, சாதிகுல வேற்றுமை, தீச்செயல் முதலியவற்றால் கோயில் வழிபாட்டையும் கை விடுவாராயினர். - -

சுருங்கச் சொல்லுமிடத்து, சங்ககாலத்துச் சமயநூல்கள் காணப்படாமையால் நமக்குத் தெளிய விளங்காதிருந்த சிவவழிபாடாகிய சைவம், மூவர் முதலிகள் காலத்தில் நன்கு நிறுவப்பட்டு அவர் கட்குப் பிற்காலத்தே திருந்தியகோயில்களை இடமாகக் கொண்டு, மன்னர் செல்வர் முதலியோ ரால் பேணப்பெற்று, மெய்கண்ட தேவர் முதலிய சான்றோர்களால் செவ்விய ஒழுக்கம் வகுக்கப் பெற்றுச் சிறப்புற்ற சைவம், இன்று சாதிகுல வேற்றுமையிலும் தனித்துண்ணும் சோற்றிலுந்தான் நிற்கிறது. மூவர் முதலிகள் வழிபட்டுப் பரவிக்