பக்கம்:தமிழ்மாலை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

அடிகளாரும் தம் அறிவுக்கடல் இதழில் விரிவாக எழுதியுள்ளார்கள்.இதற்குச் சான்றாக ஒர் ஐரோப்பியர் வரைந்த ஒரு படத்தையும் அப்படத்தில் இதன் தெற்குக் கரையில் நகர் நடுவே (தற்காலம் நாணயக்காரத்தெரு எனப்படும் இடத்தில்) நான்கு மாடிக்கட்டடம் இருப்பதையும் கன்னிமரா நூலகத்தில் நான் பார்த்திருக்கின்றேன். இந்தக் கடலில் கலக்கக் கிழக்கு நோக்கித் திரும்பும் வடகரையில் பார்ப்பனர் இடம்பெற்று வாழ்ந்துள்ளனர். இன்றும் அப்பகுதி பார்ப்பனச்சேரி எனப்படுகின்றது. -

அக்கரை அகரம்

ஆரியராக வந்தோர் ஊர்ப்புறத்தே ஆற்றின் அக்கரையில் குடியிருப்பு அகம்'அமைத்துத்தங்கினர்.இஃதே'அக்கரையகரம் எனப்பட்டது.அத்தமிழை அக்கரைக்கிரகம் எனக்கொண்டு அக்ரகாரம் என்றனர்.தமிழில்அக்கரகாரம் என்றொருமூலிகை உண்டு.அது எரிச்சலைத்தரும் மூலிகைஅக்கரையகரம் என்பதே உரிய சொல். இப்போதும் அகரம் என்ற பெயருடைய ஊர்கள் பல இருப்பதைக் காணலாம்.ஆனால், பார்ப்பனச்சேரி என்பது பழங்காலவழக்கை நினைவுபடுத்துவது. -

அவ்வாறு ஊர்க்குப் புறத்தே ஆற்றங்கரையில் இடம்பெற்றிருந்தோர் திருவளர் வேதாசலம் காலத்தில் ஊர்க்குள்ளே மையமான பகுதியில் அக்கரையகரம் கொண்டு வாழ்வதும் பண்டைத் தமிழ் நெய்தல்நில மக்களாம் மீனவர் ஒதுக்கப்பட்டவராக ஊர்க்குப் புறத்தே கடல் எல்லையில் வாழ்வதும் ஒருவகை இன உணர்வைத் தந்துள்ளது. இவ்வுணர்வை இவர் வெளிப்படுத்தியுள்ளார்.

நாகை நகரில் திருநெல்வேலியிலிருந்து அரசுப்பணியாக வந்து அறமன்றத்தில் அமீனா அலுவல் மேற்கொண்டிருந்தவர் திரு மருதநாயகம் என்பார்.தமிழ் ஆர்வமும், ஒரளவுபுலமையும்,மிகுசைவப்பற்றும்,சைவசித்தாந்த அறிவும் கொண்ட இவர் நாகை வெளிப்பாளையத்தில் சைவ சித்தாந்த சபை ஒன்றை நிறுவினார். அதில் கிழமைதோறும், திங்கள்தோறும் இளைஞரான திருவளர் வேதாசலத்தைச் சொற்பொழிவாற்றச் செய்தார்.அக்கூட்டங்களில் மேற்கண்ட இனஉணர்வுக் கருத்துக்களை திருவளர் வேதாசலம் ஆணித்தரமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இளம்பருவத்திலேயே வடமொழிப்பயிற்சியையும் தம்முயற்சியாலேயே பெறத் துவங்கினார். மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ்ப்புலத்துக் காலத்தை ஒர் அரண்மனையாக உருவகப்படுத்திக்கண்டதிருவளர்வேதாசலம் அது பாழ்பட்ட அரண்மனையாகக் காட்சியளிப்பதாகவும் அதற்குள் சில ஒளி மாணிக்கங்கள் விளங்குவதாகவும் கொண்டு அவ்வொளி மாணிக்கங்களை நூல்களாகக் கண்டார். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/20&oldid=687080" இலிருந்து மீள்விக்கப்பட்டது