பக்கம்:தமிழ்மாலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4

“உள்நுழைந்து அவற்றினருகே சென்று விழைந்து நோக்க அவை.அவ்வரிய பெரிய முழு மாணிக்க மணிகள் தொல்காப்பியம், திருக்குறள்,இருக்கு வேதம், திரிபிடகம் முதலியனவாய் இனிது விளங்கின . . என்று எழுதி இந்நூல்களின் துணைகொண்டே ஆய்வுகள் செய்ததாகவும், மேலும்துணையாகத்தமிழ் இலக்கியங்களைக்கொண்டதாகவும் குறித்துள்ளார். தமிழ்ப்பண்பாடுகளை வாழ்வியலைப்படித்துணரும்போதே அவற்றின் உயர்தன்மைகளைச் சுவைத்துச் செம்மாந்துள்ளார். பழந்தமிழர் வாழ்வுடன் அவர்கள் திராவிடர் எனப்பெற்ற குறிப்புகளையும் கண்டுள்ளார். இருக்கு முறையில் திராவிடர்கள் தஃச்சூக்கள் என்றும், அகரர்கள் என்றும் குறிக்கப்படுவதைக் கண்டு அடி உணர்வில் ஒர் எழுச்சி கொண்டார். இவ்வுணர்வைத்தம் அறிவுக்கடல் என்னும் இதழில் அவ்வப்போது எழுதினார். இருக்கு மறையில் இந்திரன் எனப்படும்.ஆரிய வேந்தன்திராவிடர்க்ளை அழித்தான் என்பதுடன் ஆரியர்கள் திராவிடரதுவாழ்வியல்வளத்தைக்கண்டு பொறாமை கொண்டனர் என்பதையும் கண்டார். இருக்குமறையில் பின்வரும் தொடர்கள் உள்ளன:

“செல்வத்திற் சிறந்த தஃச்சூக்களை நீயே (இந்திரன்) தனியாய் நின்று குலிசப்படையால் பிளந்து கொன்றனை" سیاسی “கிரியைகளைச் செய்யாத அப்பண்டை மக்கள்” “பொன்னணிகளாலும் மணிக்கலங்களாலும் தம்மை ஒப்பனை

செய்துகொண்ட அவர்கள்” "இந்நிலத்தின் கடைக்கோடிக் கரையில் ஊடுருவிப்

பரவி நிற்கும்.அவர்கள்' என்றுள்ளவற்றைக் கண்டு பண்டைத் திராவிடரின் செல்வ வளத்தை இருக்குமறை குறிப்பதையும் ஆரியர் அரசன் இந்திரன் அவர்களை அழிக்க முந்தியதையும் கண்டார். அத்துடன் ஆதி திராவிடர் என்னும் வழக்கையும் உன்னினார்.அவர்கள் தம்தமிழினத்துப்பண்டைமக்கள்வழியினர் என்பதையும் அவர்கள் தீண்டப்படாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பெறுதல் இடையில் ஆரியர் செய்தது என்பதையும் உணர்ந்து அவர்பால் பேரன்பு கொண்டார். அது வளர்ந்து பிற்காலத்து பல்லாவரத்தில் தம் மாளிகையில் ஒர் ஆதிதிராவிடரை மாணவராகச் சேர்த்துக்கொண்டு அவர்தம்குடும்பத்திற்கும் உதவி, ஒம்பினார். - - .

இருக்கு மறையை ஊன்றிப் பயின்ற அடிகளார் அதன்கண் மாந்தர் இயல்புக்கு ஒவ்வாத அருவெறுப்புப் பழக்கங்கள் மரபுகள்ாக உள்ளவற்றைத் தோலுரித்துக்காட்டினார். - r "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/21&oldid=687081" இலிருந்து மீள்விக்கப்பட்டது