பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. பாரதி தன்னுடைய கவிதைகளுக்கு எழுதியுள்ள சில முன்னுரைகள் 115 நதியாக இருக்கலாம். கங்கை நதியைப் போல ஆரியர்களும், “செல்வம் வளர்வதற்கே - தொழில் ஆயிரம் நித்தம் புதியன - கண்டு வாளிப் பழம் பொருளெற்றுவாரி இங்ங்ணமில்லாது சத்த மற்ற நெடுங்காட்டில், மலையடிக் கீழ்ப் பட்ட இருட் குகையில் நீரை வைத்துப் பாசியால் மூடிக் காக்கும் சுனைகளைப் போன்ற ஒழுக்கம் ஆரியர்களால் வெறுத்துதற்குரியது என்று பாரதி தனது விளக்கவுரையில் கூறுகிறார். எந்த ஒரு நாட்டிலும் செல்வமும், அறிவும் பெருகிக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது நாடல்ல. அதில் அரசனுடைய கடமையும், அரசாங்கத்தினுடைய கடமையும் முதன்மையானது. இந்த ஒழுக்கம் அனைவருக்கும் பொருந்தும். ஒவ்வொரு தனி நபருக்கும் பொருந்தும். பாஞ்சாலி சபதம் காவியத்தில் கவிஞர் மாலை வருணனை கூறுகிறார். கவிஞரின் உள்ளத்திலிருந்து எழும் அற்புதமான இயற்கை வருணனை. அவை சிறப்பு மிக்க கவிதை வரிகளாகும். அதைப்பற்றி பாரதியார் ஒரு தனியான கட்டுரையும் எழுதியுள்ளார். அது ஒரு அற்புதமான உரைநடை இலக்கியமாக அமைந்திருக்கிறது. “சிரடியாற் பழ வேத முனிவர் போற்றும் செழுஞ் சோதி சீர்களும் அடிகளும் இயைந்த மந்திரங்களால் முன்னைய வேதரிவிகள் போற்றிய ஞாயிறு.”