பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 125 என்று கூற முடியவில்லை. பாரதியின் கவிதைகளைப் போலவே அவருடைய சிறந்த கட்டுரைகளையும், கதைகளையும் அவைகளில் பொதிந்துள்ள ஆழ்ந்த கருத்துகளையும், கருத்தமைவுகளையும் பாரத நாட்டின் இதர மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடப் பட வேண்டும். அதற்கு அறிஞர்கள் பலரும் தனி முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும். காசியில் பாரதிக்கு ஒரு நினைவுச் சின்னமும், மணி மண்டபமும் அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். காசி பல்கலைக் கழகத்தில் பாரதிக்கு ஒரு துறையை அமைக்க வேண்டும். பாரதியின் பகவத்கீதை தமிழாக்கம் ஒரு அற்புதமான படைப்பாகும். அவர் தன்னுடைய பகவத்கீதை தமிழாக்க நூலுக்கு ஒரு மிக அற்புதமான முன்னுரை எழுதியுள்ளார். அந்த முன்னுரை பாரதியின் உரைநடைக்கு மணி முடியாகும். அந்த முன்னுரை பாரதியின் ஒரு தனியான சிறப்பு மிக்க இலக்கியப் படைப்பாகவே அமைந்துள்ளது. அந்த முன்னுரை பதிமூன்று பகுதிகளாக எழுதப் பட்டிருக்கிறது. அதிலுள்ள பாரதியின் தமிழ் உரைநடை மொழிச் சிறப்பைக் காண்பதும், கண்டறிவதும் நமது கடமையாகும். அந்த உரைநடையிலும், பாரதியின் இயல்பான தமிழ் மொழிச் சிறப்பையும் கருத்துச் செழுமையையும் நடை வேகத்தையும், பாரதப் பண்பாட்டு உணர்வையும் காணலாம். இந்தத் தமிழ் இலக்கியச் சிறப்பு மிக்க முன்னுரையின் சில பகுதிகளை இங்கு காணலாம். முன்னுரையின் 1-ம் பகுதியில் அறிவுத் தெளிவைத் தவற விடாதே! பின் ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும். நீ கம்மா இருந்தாலும் அப்போது உன்மனம் தனக்குத்தான் ர்தேனும் நன்மை செய்து கொண்டேயிருக்கும்.