பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20.-பாரதியின்_பகவத்_கீதை_தமிழாக்கம் 132 -ஜாச்சாரியார், மத்துவாச்சாரியார் என்று மூன்று மதஸ்தாபகா சாரியரும் வியாக்கியான மெழுதி, இதனை ஹிந்து தர்மத்தின் ஆதாரக்கற்களில் ஒன்றாக நாட்டியிருக்கிறார்கள் என்பதை இந்த மூடர் அறிகின்றிலர். கொலைக்குத் துண்டும் நூல் ஒன்றுக்கு சங்கராசாரியார் பாஷ்யம் எழுதுவதென்றால் அஃது எத்தனை வினோதமாக இருக்குமென்பதைக் கருதித் தம்மைத் தாமே நகைக்குந்திறமையிலர். “கொலை எவ்வளவு தூரம். பகவத் பாத சங்கராசாரியர் எவ்வளவு தூரம்? “மேலும் நாம் மேலே கூறியபடி பகவத் கீதையைக் கொலை நூலென்று வாதாடுவோர் அதில் முகவுரை மாத்திரம் படித்தவர்களே யன்றி நூலின் உட்பகுதியில் நுழைந்து பார்த்தவரல்லர் என்பதில் சந்தேகமில்லை. “ஈசனைச் சரணாகதியடைந்து இக லோகத்தில் மோகூ சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக்களியில் மூழ்கி வாழும் படி வழி காட்டுவதே பகவத் கீதையின் முக்கிய நோக்கம். அதனால் இஃது கர்ம சாஸ்திரம். இஃது பக்தி சாஸ்திரம், இஃது யோக சாஸ்திரம், இஃது ஞான சாஸ்திரம், இஃது மோகூடிசாஸ்திரம், இஃது அமரத்வசாஸ்திரம்” என்று விளக்கம் கூறி பாரதியார் நமக்கு ஒரு அற்புதமான காட்சியைக் காட்டுகிறார். அவர் இங்கு கூறியுள்ள சிறந்த கருத்துச் செறிவு மிக்க சொற்களும், சொற்றொடர்களும் பாரதியின் தமிழ் உரைநடைக்குத் தனிச் சிறப்பைத் தந்திருக்கின்றன. மேலும் இங்கு பாரதியின் தமிழ் உரைநடையில் ஒரு புதிய வளர்ச்சி நிலையை அபிவிருத்தியைக் காண்கிறோம்.