பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பாரதியின் பகவத் கீதை தமிழாக்கம் 135 அளாவுவன போன்ற உயரமுடைய மாடங்களும், கூடங்களும், சிகரங்களும் சூழ்ந்திருப்ப அவற்றிடையே நிலா விளை -யாட்டுக்காகச் சமைக்கப் பட்டிருக்கும் சந்திரகாந்த மேடைகளின் மேலே இனிய தமிழ் பேச்சுக்கும், தமிழ்ப் பாட்டுக்கும், நாட்டியங்களுக்குமிடையே முத்தொளி வீசும் நகை பிரிகின்ற மாதர்களுடனே முத்து முத்தாக உரையாடி முத்தமிட்டு முத்தமி ட்டுக் குலாவிக் காதல் நெறியில் இன்புற்றிருந்தாலென்ன? அஃதன்றி யோக வழியிலே சென்று மூச்சை அடக்கிக் கொண்டு ஆயுதங்களைப் போல வலிய நகங்களையுடைய புலி சிங்கம் கரடி முதலியன பதுங்கிக் கிட்க்கும் பொந்துகளையுடைய காட்டு மலையுச்சியில் தாமொரு பொந்தில் இருந்தாலென்ன? உள்ளங்கை நெல்லிக் கனிபோல் விளங்குவதோர் உண்மை கூறுகின்றோம்.” சலனமின்றி மனதிலே சாந்த நிலை பெற்றோர் உய்வார். இதுவன்றோ ஜனகன் முதலியோரின் முடிபானது? எங்கும் நிறைவற்றதாய்ப் பிரிக்கப் படாத மூலப் பொருளே அறிவும் உண்மையும், மகிழ்ச்சியும் ஆகிய கடவுளே!” என்று நல்ல தமிழில் விளக்கிக் கூறுயுள்ளார். மேலும் துறவு வழி பற்றி அதை மறுத்து பாரதியார் கூறுகிறார். "வேத காலத்தில் இந்தத் துறவு வழி ஹிந்துக்களுக்குள்ளே கிடையாது. வேத காலத்தில் சந்நியாசம் நமக்குள்ளேயே இருந்திருப்பதாக சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். வசிஷ்டர், வாமதேவர், முதலிய வேதரிஷிகள் அத்தனை பேரும் மணம் புரிந்து கொண்டு மனைவி மக்களுடனேயே இன்புற்று வாழ்ந்தனர். புலன்களை அடக்கியாளும் பொருட்டாக அக்காலத்தில் ரிஷிகள் பிரம்மச்சாரிகளாக இருந்து நெடுங்காலம் பலவகைக் கொடிய தவங்கள் செய்ததுண்டு. ஆனால் குறிப்பிட்ட