பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வளர்ச்சியில் பாதியின் உடைஅடக்னிவாசன் 23 காட்டுகிறார். அதையே ஆண்டவனுடைய அலகிலா விளையாட்டாகக் கம்பன் எடுத்துக் காட்டுகிறார். “உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அறியவன்” என்று சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணப் பெருநூலைத் தொடங்குகிறார். இங்கு “உலகெலாம்” என்பது உலகில் உள்ள உயிர்ப்பொருள் அனைத்தும் என்றும், "அறிவு பெற்றுள்ள உயிர் எல்லாம்” என்றும் பொருள் கொள்ளலாம். இவ்வாறு மிக விரிவான, பரந்த ஆழ்ந்த, அனைத்தளாவிய கருத்து வடிவத்தில் உலகு, உலகம் என்னும் சொற்களைக் காண்கிறோம். ஒரு மொழியின் கவிதை வடிவாயினும், உரைநடை வடிவாயினும், அதன் சொல் பெருக்கத்தை ஒட்டி வளம் பெற்று விரிவடைகிறது என்பதைக் காண்கிறோம். அந்த வகையில் தமிழ் மொழியில், குறிப்பாகச் சங்க காலத்திலிருந்து மத்திய காலம் வரையில் கவிதை (செய்யுள்) வடிவில் எண்ணற்ற பல நூல்களும் தோன்றிச் சொல்வளம் பெற்றிருக்கிறது. அந்தச் சொற்களின் பொருளும், கருத்துக்களும் கருத்தமைவுகளும் கருத்து வடிவங்களும் வளம் பெற்று விரிவடைந்திருக்கின்றன என்பதைக் காண்கிறோம். பலவேறு சமயங்களும் சிறந்த பல தத்துவஞானக் கருத்துக்களையும், அறநெறிகளையும், ஒழுக்க நெறிகளையும், தனிமனித வாழ்க்கை மற்றும் சமுதாய வாழ்க்கையின் தத்துவங்களைப் பற்றியெல்லாம் கூறும் சிறந்த கருத்துக்களைப் பற்றி, 'பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது” என்று ஆற்றின் பெருமையைப் பற்றி அது கொடுக்கும் வளத்தின் விரிவைப் பற்றிக் கம்பர் கூறுகிறார். கோசல நாட்டுமக்கள்