பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. στφ55μό Οσπένενώ 24 செல்வமும் கல்வியும் நிறைந்திருந்தனர் என்று இரண்டையும், இணைத்துக் கூறுகிறார். இன்னும், “எல்லாரும் எல்லாப்பெரும் செல்வமும் எய்தலாலே இல்லார்களும் இல்லை, உடையார்களும் இல்லை” என்று கோசல நாட்டு மக்கள் எல்லாப் பெரும் செல்வங்களையும் பெற்றிருந்தனர், என்று அந்நாட்டு மக்களின் வாழ்க்கை நிலையை மிகவும் உயர்ந்த மட்டத்திற்கு உயர்த்திக் காட்டி எடுத்துக் கூறியிருக்கிறார். இன்னும் “அன்பு அரும்பி தருமம் மலர்ந்து நிறைந்திருந்ததாகவும் குறிப்பிடுகிறார். இன்னும் கோசலநாடு போர் இன்றி சமாதானம் நிலவியிருந்தது. உள்நாட்டுக் கலவரங்களும் சண்டைகளும் களவுகளும் சச்சரவுகளும் இன்றி அமைதியாக இருந்தது. மக்கள் எல்லாம் அமைதியாகத் தங்கள் தொழில்களைச் சிறப்பாகச் செய்து கொண்டு நாட்டின் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தனர். எல்லோரும் கல்விபெற்று அறிவும் ஞானமும் நிறைந்தவர்களாக இருந்தார்கள். நேர்மையும் ஒழுக்கமும் நிறைந்தவர்களாக இருந்தார்கள். மக்கள் ஒருவரை ஒருவர் மதித்து நட்புறவுடன் சகோதர பாசத்துடன் கூடி வாழ்ந்தார்கள். அயோத்தி நகரம் சுத்தமாகவும் அழகாகவும் அமைந்திருந்தது. தெருக்கள் நேராக அமைந்திருந்தன. கட்டிடங்கள் சிறப்பாக சிற்பக் கலை நிரம்பி அமைந்திருந்தன. கோவில்களும் குளங்களும் தெருக்கள் தோறும் அமைந்து மக்கள் பக்தி நெறியிலும் ஆன்மீக நெறியிலும் சிறந்து விளங்கினர். மக்களை உயிராகவும், தன்னை உடம்பாகவும் கருதி மன்னன் சிறப்புற் ஆட்சி நடத்தினான். மக்கள்.அரசுக்கும், அரசு மக்களுக்கும் மரியாதை செலுத்திச் சிறப்பாக ஆட்சி அமைந்து மக்களின் நல்வாழ்வு அமைந்திருந்தது.