பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 41 வள்ளுவப் பெருந்தகை தனது திருக்குறளின் அறத்துப் பாலில் இல்லறம், துறவறம் என்னும் தலைப்புகளிலும் பொருட்பாலில் அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்னும் தலைப்புகளிலும் இன்பத்துப் பாலில் களவியல், கற்பியல் என்னும் தலைப்புகளிலும் மிக்கச் சிறப்பான உலகம் போற்றும் குறட்பாக்கள் பாடியுள்ளார். திருக்குறள் தமிழ் மொழிக்குள்ள தனிச் சிறப்பாகும். வள்ளுவர் பாடியுள்ள “அ” என்னும் எழுத்தில் முதல் எழுத்தில் தொடங்கி ‘ன்’ என்னும் கடைசி எழுத்தில் முடியும் 1330 குறட்பாக்களில் சரி பாதிக்கு மேல் 700 பாக்கள் பொருட்பாலில் உள்ளன. எனவே வள்ளுவப் பேராசான் முப்பாலிலும் பொருட்பாலில் அதிக கவனம் எடுத்துள்ளார் என்பது தெரிகிறது. அரசுகள் அமைந்து அவை செயல் பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அரசியல், அங்கவியல் பற்றி அதிக கவனம் வள்ளுவர் எடுத்துக் கொண்டுள்ளது கவனிக்கத் தக்கதாகும். வள்ளுவர் தனது 1330 குறட்பாக்களில் ஒன்றில் கூட தமிழ் என்னும் சொல்லைப் பயன் படுத்தவில்லை. ஆயினும் அவர் தனது உலகம் போன்றும் இலக்கியமான திருக்குறள் மூலம் தமிழ் மொழியின் சொற் கழஞ்சியத்திற்கு சிறந்த பங்கைச் செலுத்தியுள்ளார். அரசு அதன் அங்கங்கள், அவைகளின் செயல்பாடு, சமுதாயத்தின் பொருள் பெருக்கம், செல்வச் செழிப்பு, சீரான வினியோகம் சமுதாய மேம்பாடு, நாட்டின் படைபலம், தற்காப்பு, அமைதி ஆகியவை தொடர்பான வள்ளுவர் கூறியுள்ள பல சொற்களும் தமிழ் மொழியின் வளத்திற்கு மேலும் அதிக உரம் சேர்க்கின்றன.