பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 45 ஆலயங்களில் வழிபாடு செய்வதும், திருக்குளங்களிலும் ஆறுகளிலும் நீராடுவதும், கண்ணுக்கினிய அருமையான காட்சிகளாகும். இவைகளைப் பற்றியெல்லாம் விரிவாக விளக்கிக் கூறும் இலக்கியங்களின் தமிழ் சொற்கள் தமிழ் மொழியைப் பெரிதும் வளப்படுத்தியிருப்பதைக் காண்கிறோம். இதேபோல இன்னும் ஏராளமான பல சிற்றிலக்கியங்களும் கிராமப்புற மக்களின் இலக்கியச் செல்வங்களும் தமிழ் மொழிக்கு உரமூட்டியுள்ளன. சங்க காலத்தில் சேர, சோழ பாண்டிய மன்னர்களாகிய மூவேந்தர்கள், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆதரவு கொடுத்தனர். அக்காலத் தமிழ் இலக்கியங்கள், தமிழின் பண்டயப் பெருமைகளை உலகுக்கு எடுத்துக் காட்டுவனவாக அமைந்திருந்தன என்பதைக் கண்டோம். அக்காலத்திய தமிழ் மொழியின் சொல்வளம், இலக்கியம் இலக்கணம் ஆகியவை நமது மொழியின் அடித்தளமாக அமைந்திருந்தது என்பதை அறிவோம். தொடர்ச்சியாக ஏற்பட்ட தமிழகத்தின் பொது வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும், பாரத நாட்டின் பொது வளர்ச்சியிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளின் அரசியல் பொருளாதார சமுதாய வளர்ச்சியிலும் தமிழ் மொழிக்கும் வட இந்திய மொழிகளுக்கும், பாலி மற்றும் பிராகிருத மொழிகளுக்கும் சமஸ்கிருத மொழிக்கும் இடையில் ஏற்பட்ட உறவு, தொடர்பு சேர்மானம், பரஸ்பர பரிமாற்றம் முதலியவற்றால் மத்திய காலத்தில் மிகப் பெரும் அளவிற்கு தமிழ் மொழியின் இலக்கியங்கள் வளர்ச்சி பெற்றுத் தமிழ் மொழியின் சொல்வளம் விரிவுபட்டது. இதற்கு எடுத்துக் காட்டாகக் கம்பனது மகா காவியத்தின் சொல்வளத்தின் அருஞ் -சுவையை சிறிது கண்டோம். திருக்குறளையும், ஐம்பெரும்