பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 75 தோன்றியிருப்பதால் நாம் இவ்விஷயத்தில் தமோகுணம் செலுத்தாமல் கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் முதலிய மகாகவிகளுக்கு ஞாபகச்சிலைகளும், வருடோத்சவங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும். திருவள்ளுவர் மைலாப்பூரில் பிறந்தவர். அங்கே திருவள்ளுவர் கோயில் இப்போது இருக்கிறது. ஜன்ம தினம் நிச்சயமாகத் தெரியவில்லை. ஒருவேளை அந்தக் கோயில் பூசாரிக்குத் தெரியக் கூடும். לה י ஐந்து மகாகாவியங்களிலே சிறந்ததாய், “சிலப்பதிகாரம் செய்த இளங்கோ முனிவர் வஞ்சி நகரத்தில் பிறந்தவர். இந்த வஞ்சி நகரம் இப்போது திருச்சிராப்பள்ளிக்கு அருகேயுள்ள கரூர் என்று பண்டித மு.ராகவய்யங்கார் தீர்மானம் செய்கிறார். இந்த ஆசிரியரது ஜன்ம தினத்தையும் நிச்சயமாகச் சொல்வதற்கு வழியில்லை. மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயிலைச் செம்மையாகக் கட்ட வேண்டும். இப்போது மிகவும் ஏழ்மை நிலைமையில் இருக்கிறது. திருவழுந்துளிலும் கரூரிலும் ஞாபகச் சின்னங்கள் ஏற்படுத்த வேண்டும். ஜன்ம தினங்கள் நிச்சயிக்கப்பட வழியில்லை. ஆதலால் சரஸ்வதி பூசைக்கு முன்பு அல்லது பின்பு குறிப்பிட்டதொரு தினத்தில் இந்த மகான்களின் ஞாபகத்தைக் கொண்டாடுதல் பொருத்தமுடைய செய்கையாகும். நவராத்திரி உத்சவங்கள் நமக்குள் வழக்கமாக உள்ளதால் அந்த சமயத்தை ஒட்டி நமது மகாகவிகளுக்குத் திருவிழாக் கொண்டாடுதல் சுலபமாக இருக்கும். “பண்டித சபைகளையும் பொதுஜன ஆரவாரங்களையும் கோலா ஹலமாக நடத்தி எல்லா வருணத்தாரும் எல்லா மதஸ்தரும் சேர்ந்தால் சந்தோஷமும் அறிவுப் பயனும் உள்ள மாண்பும் பெற இடமுண்டாகும். மத பேதங்கள் பாராட்ட இடமில்லாத