பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வளர்ச்சியில் பாதியின்-உரைநடைஅ. சீனிவாசன் 77 ஆயினும் பாரதியின் கனவின் படி அவை மக்களிடம் இன்னும் அதிகமாக விரிவாகப் பரவ வேண்டும். பிரபலமடைய வேண்டும். அதற்கு ஆவன செய்ய வேண்டும். அதற்காக அரசாங்க விடுமுறை அவசியமில்லை. ஏற்கனவே நமது நாட்டில் அரசாங்க விடுமுறை தினங்கள் அதிகரித்துள்ளன. அதனால் பணிக்கலாச்சாரம் பாதிக்கப் பட்டிருக்கிறது. நமது பெரும் புலவர்கள், பெரியார்கள், மகான்கள், வீரர்கள் பெயரில் ஊர்தோறும், அமைப்புகளையும் விரிவாக நிறுவ வேண்டும். கூட்டங்களையும், பல நினைவு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும், அவர்களுடைய கருத்துக்களை மக்களிடம் பரப்ப வேண்டும். அவர்களைப் பற்றிய நூல்கள் வெளியிட வேண்டும். பள்ளிகளில், கல்லூரிகளில், அலுவலகங்களில் தொழில் நிறுவனங்களில் கிராமங்களில் மாலை நேரங்களில் இவ் -விழாக்களை நடத்தலாம். இப்பெரியார்களின் படைப்புகளைப் பிரபலப்படுத்தி மக்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும்.