பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 131


155. எது இல்லையோ அதை அறிக

பிறப்பிற்கு முன்னால் இருந்த வெறுமை இறப்பு வரை வாழ்க்கையைத் தொடர்கிறது. இதனிடையே முழுமையைப் பெறுகிறது

ஒவ்வோர் ஆணிடமும், பெண்ணிடமும் எங்கேயோ ஓர் இடத்தில் மற்றவரின் முழுமையைப் பெறுகின்ற வெறுமை உள்ளது

உள்ளதைப் பெறுகையில், எது இல்லையோ அதனை அறிக

வெறுமையை உணர்ந்தபின் அசைவின்மையை அறி, அது அசைவையும் மாறுதலையும் மனத்தில ஏற்றுக் கொள்

156. வெறுமையை நினைவு கொள்

ஆணாகப், பெண்ணுடன் மனமகிழ்வுடன் இரு பெண்ணாக ஆணுடன் நிறை மகிழ்வுடன் இரு சிந்தனையாளாகச் சிந்தனைகளுடன் நிரம்பி இரு ஆனால் வெறுமையை மறவாதே

வியப்புக்கேதுவான நமது ‘நாம’ ‘தான்’ என்பதுடன் முழுமையாக நிரப்பும் போது, வெறுமையை நினைவு கொள். வெறுமைதான்