பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 145


அவளது வெற்றிடத்தை வெறுமையாக்குகிறான் எடுத்துக் கொள்வதால் பெண் ஆணை ஏற்றுக் கொண்டு அவனது முழுமையை வெறுமையாக்குகிறாள்

முழுமையை எடுத்தபின் முழுமை எங்கே? நிரப்பிய பின் வெற்றிடம் ஏது?

ஒன்றை நிரப்புவதும், மற்தை வெறுமையாக்குவதும் இரண்டிலும் உள்ள வெற்றிடத்தை நிரப்புவதே ஆகும்

ஆண் பெண்ணின் நிரம்பிய வெற்றிடத்தை நிரப்பும் போது, அவனால் கொடுக்கப்பட்டதைவிட மிகப் பெரியது அது பெண் ஆணின் முழுமையை வெறுமையாக்கி எடுத்துக் கொள்ளும்போது, அது அவளது மிக உயர்ந்த பெற்றுக் கொள்வதாகும்

மிக உயர்ந்ததைவிடச் சிறந்தது எது? மிக உயர்ந்ததைவிட மிகமிக உயர்வானது என எதைக் கூறலாம்?

176. இயற்கையின் உயிர்ப்பு

ஆண், பெண்ணிடம் புகுவதும, பெண் ஆணை எடுத்துக் கொள்வதும் மறைபுதிரானதே வெளிப்புற முழுமை உட்புற வெற்றிடத்தைக் காண்பதும், உட்புற வெறுமை வெளியில் உள்ள முழுமையைக் கண்டு