பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



158 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


உள்ளது என்கிற நிலை ஏதோ இருக்கிறது என்ற எண்ணத்தை முறியடிக்கிறது எல்லாம் உள்ளவர்கள், ஏனோ அவற்றைச் சிலருக்குத் தருவதில்லை

193. போதலும் வருதலும்

காற்றும், நெருப்பும் நீரிலிருந்தும், நிலத்திலி ருந்தும் ஏற்படுகின்றன வெளியில் உள்ள வெப்பம், உள்ளே இருககும் வெப்பததைத் தூண்டுகிறது

காதலர் ஒவவொருவரும் மற்றவரால ஏற்பட்டு இருவரில் மறைகின்றனர்

நிலம் மண்ணை அசைக்க, மச்சையும், சதையையும் உசுப்புகிறது கனல் தீயை உருவாக்குகிறது

நிலத்தோடு நிலம் மோதுவது இரண்டிலும அடங்கிய நீரை ஈரப் படுத்துகிறது நுரைக்க வைக்கிறது கடந்து போதலும் நிலைத்தலும் இதுவே

194. நிலம் உயிர்க்கின்றது

கலவியின் போது, உடல் உடலை மூச்சுக கொள்வது போன்று ஆணும் பெண்ணும் மூச்சை உள்ளிழுக்கின்றனர். வெளிவிடுகின்றனர்

காதலர்களின் வாயிலாக நிலம் தானாகவே உயிர்க்கிறது ஒருவருடைய மூச்சுக் காற்றே மற்றவருடைய மூச்சுக் காற்றாகிறது இந்த மூச்சுக் காற்று